அகமதாபாத்:17வது ஐபிஎல் தொடரின் 59வது லீக் போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ், ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர் கொண்டது. குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன் படி முதலில் களமிறங்கியது குஜராத் அணி. சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இருவரும் ஜோடி சேர்ந்து சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் துவம்சம் செய்தனர். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி இருவரும் சதம் விளாசினார், மேலும் முதல் விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் சேர்த்தனர்.
இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்தது குஜராத் டைட்டன்ஸ். இதனையடுத்து 232 ரன்கள் எடுத்த வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்தி இருந்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரச்சின் ரவீந்திரா மற்றும் ரகானே தலா 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அவர்களை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் டக் அவுட் ஆகி வெளியேறினார்.