சென்னை:17வது ஐபிஎல் தொடர் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 3 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இதன் முதல் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி (RR VS LSG) கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
ராஜஸ்தான் - லக்னோ: இந்த போட்டியானது ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கப்படவுள்ளது. அந்த அணியில் இளம் வீரர்களான ஜெய்ஷ்வால், துருவ் ஜுரல், சஞ்சு சாம்சன் ஆகியோர் வலுவான பேட்டிங்கை கொண்டு இருக்கப் பந்து வீச்சில் டிரென்ட் போல்ட்,அஷ்வின், சஹால், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர்.
அதேபோல், 2022ஆம் அறிமுகமான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இரண்டு தொடரில் பங்கேற்று இரண்டு முறையும் பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. இந்த முறையும் அதே உத்வேகத்துடன் அந்த அணி களம் காண உள்ளது.
லக்னோ அணியில் ராகுல், நிக்கலஸ் பூரான், ஸ்டேய்னிஷ் ஆகிய பல அதிரடி பேட்மேன்கள் என அதிரடி பேட்ஸ்மேன்கள் நிறைந்துள்ளனர். அதே போல் பந்துவீச்சில் நவீன் உல் ஹக் ,குர்னால் பாண்டியா, ரவி பிஷ்னோய் ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர்.
இரு அணிகளும் இதுவரை 3 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ராஜஸ்தான் இரண்டு முறையும், லக்னோ ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. போட்டி நடைபெறும் மான்சிங் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்து வந்துள்ளது. இதனால் இன்றைய போட்டியில் டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கை தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத்- மும்பை (GT VS MI): குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி - மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், இரு அணிகளும் தலா 2 முறை வென்றுள்ளது.
2022 ஆம் ஆண்டு அறிமுகமான குஜராத் அணி முதல் தொடரிலே ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியது. கடந்த ஆண்டு இறுதி வரை போராடி நூலிலையில் கோப்பையை நழுவ விட்டது. அதேபோல், 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் சம பலத்துடன் உள்ளது.
ஆனால் கடந்த 11 ஆண்டுகளாக தங்களது முதலாவது லீக் ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெற்றதே இல்லை. அந்த மோசமான சாதனையை இன்று மாற்றுமா? மும்பை அணி என்பதைப் பொறுத்து இருந்து பார்ப்போம். அதேபோல், கடந்தாண்டு குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா, இந்த சீசனில் மும்பை அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார். இதனையடுத்து அடுத்து குஜராத் அணியின் கேப்டனாக இளம் வீரரான சுப்மன் கில் செயல்பட உள்ளார். இதனால் இந்த இந்த ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:டி20 கிரிக்கெட் வரலாற்றில் 12,000 ரன்கள் குவித்து விராட் கோலி சாதனை! - Virat Kohli made history in T20