லக்னோ:கிரிக்கெட் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த தொடரில் சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, குஜராத், லக்னோ உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன.
இதன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நிலையில் ஐபிஎல் அணிகளில் ஒன்றான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தனது கேப்டன் மற்றும் துணை கேப்டன் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 2024 ஐபிஎல் தொடரின் லக்னோ அணியின் கேப்டனாக கே.எல்.ராகுலும், மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த நிக்கோலஸ் பூரன் துணை கேப்டனாக செயல்படுவார்கள் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பயிற்சியாளர் நியமனம்:அதே சமயம் தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர் வீரர், லான்ஸ் க்ளூஸ்னரும் இடம்பிடித்துள்ளார். இவர் தென்னாப்பிரிக்க, ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே உள்ளிட்ட தேசிய கிரிக்கெட் அணிகளுக்குப் பயிற்சியாளராகச் செயல்பட்டுள்ளார்.