தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு பதக்கம்! அமன் ஷெராவத் அரை இறுதிக்கு தகுதி! - paris olympics 2024

பாரீஸ் ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தத்தில் இந்திய வீரர் அமன் ஷெராவத் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

Etv Bharat
Aman sheravat (Ians Photo)

By ETV Bharat Sports Team

Published : Aug 8, 2024, 4:25 PM IST

பிரான்ஸ்:பாரீஸ் ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தம் விளையாட்டில் 57 கிலோ எடைப் பிரிவில் கால் இறுதி சுற்றில் இந்தியாவின் அமன் ஷெராவத் ரஷ்யாவின் ஜெலிம்கான் அபகரோவ் (Zelimkhan Abakarov) என்பவரை எதிர்கொண்டார். அபாரமாக விளையாடிய அமன் ஷெராவத், ரஷ்ய வீரரை கிடுக்குபிடி நகர்வுகளால் திணறிடித்தார்.

இறுதியில் அமன் ஷெராவத் 12-க்கு 0 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அமன் ஷெராவத் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். அரை இறுதியில் அமன் ஷெராவத் ஜப்பான் வீரர் Rei Higuchi என்பவரை எதிர்கொள்கிறார். இவர்கள் இருவருக்குமான ஆட்டம் இந்திய நேரப்படி இன்று இரவு 9.45 மணிக்கு நடைபெறுகிறது.

அரைஇறுதி ஆட்டத்திலும் அமன் ஷெராவத் வெற்றி பெறும் பட்சத்தில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவார். இருப்பினும், அரைஇறுதிக்கு தகுதி பெற்றதன் மூலமே அமன் ஷெராவத் பதக்கத்தை உறுதி செய்தார்.

இதையும் படிங்க:ஒலிம்பிக் மல்யுத்தத்தில் அன்ஷு மாலிக் அதிர்ச்சி தோல்வி! ஆடவரில் பதக்க வாய்ப்பு? - Paris Olympics 2024

ABOUT THE AUTHOR

...view details