தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சிஎஸ்கேவில் ரிஷப் பன்ட்? இன்ஸ்டா போஸ்ட் மூலம் உறுதிப்படுத்திய பன்ட்? தோனி ஸ்டைலில் தலைவர் போஸ்ட்! - IPL Auction 2025 - IPL AUCTION 2025

நடிகர் ரஜினியை இமிடேட் செய்து ரிஷப் பன்ட் போட்டோ வெளியிட்ட நிலையில், அந்த புகைப்படத்தின் கீழ் 2016ஆம் ஆண்டு தோனி இமிடேட் செய்து வெளியிட்ட புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்கள் கமென்ட் பதிவிட்டு வருகின்றனர்.

Etv Bharat
MS Dhoni - Rishabh Pant (BCCI)

By ETV Bharat Sports Team

Published : Aug 21, 2024, 3:29 PM IST

ஐதராபாத்: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் வீரர்கள் ஏலத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஐபிஎல் தொடரில் மொத்தம் உள்ள 10 அணிகளிலும் பெரிய மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமான வீரர்களை இந்த ஏலத்தில் சில அணிகள் கழற்றி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் வரும் ஐபிஎல் ஏலம் கடும் போட்டிமிக்கதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி கேபிட்டல்ஸ் அணி ரிஷப் பன்ட்டின் கேப்டன்சி மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த ஐபிஎல் சீசனில் அவரது கேப்டன்சியில் டெல்லி அணி லீக் சுற்றிலேயே வெளியேறியது.

இதனால் எதிர்வரும் ஐபிஎல் ஏலத்தில் ரிஷப் பன்ட்டை கழற்றி விட டெல்லி அணி திட்டமிட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. அதேநேரம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை கேப்டன் கூல் தோனியின் செயல்பாடுகள் என்பது குறைந்த வண்ணமே உள்ளது. கடந்த சீசனில் கேப்டன்சியை ரூதுராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைத்த தோனி, தனது பேட்டிங் ஆர்டரையும் மாற்றிக் கொண்டார்.

கால் மூட்டு பகுதியில் வலி மற்றும் அடிக்கடி உண்டாகும் காயங்கள் காரணமாக தோனி தனது பேட்டிங் ஆர்டடரை மாற்றிக் கொண்டு பின்வரிசையில் இறங்கத் தொடங்கினார். வரும் ஐபிஎல் சீசனில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகமும் உள்ளது. இந்திய அணியில் தோனிக்கு பிறகு பிரபலமிக்க விக்கெட் கீப்பர் என்றால் அது ரிஷப் பன்ட் தான்.

அதனால் வரும் ஐபிஎல் ஏலத்தில் ரிஷப் பன்ட்டை டெல்லி அணி கழற்றி விடும் பட்சத்தில் அவரை கைப்பற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரிஷப் பன்ட் வெளியிட்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அதில் 2016 ஆம் ஆண்டு வெளியான கபாலி படத்தில் ரஜினியின் ஸ்டைலை இமிடேட் செய்வது போல் புகைப்படம் வெளியிட்ட ரிஷப் பன்ட் அதற்கு "தலைவா" என கேப்சன் வைத்துள்ளார். அதேநேரம் 2016ஆம் ஆண்டு கபாலி படம் வெளியான ஒரு மாதத்தில் அதே ஸ்டலை தோனி இமிடேட் செய்து காட்டி இருப்பார். அந்த புகைப்படத்தை தான் ரிஷப் பன்ட் மறைமுகமாக குறிப்பிட்டு பதிவுட்டுள்ளார் என ரசிகர்கள் கமென்ட் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:கேப்டன் கூல்... கேப்டன் கூல் தான்பா... வைரலாகும் புகைப்படம்! - MS Dhoni with Friends Photo

ABOUT THE AUTHOR

...view details