டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் இடது கை நட்சத்திர பேட்ஸ்மேன் ஷிகர் தவான் இன்று உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். தவான் தனது ஓய்வு குறித்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், தனது குழந்தை பருவ பயிற்சியாளரும் வழிகாட்டியுமான மதன் ஷர்மாவைக் குறிப்பிட்டு அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மகிழ்ச்சியான நாள்:
இந்நிலையில், ஷிகர் தவானின் சிறுவயது பயிற்சியாளர் மதன் சர்மா ஈடிவி பாரத் நிறுவனத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ஷிகர் தவான் நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று ஓய்வு பெற்றார். கிரிக்கெட்டில் அவரது பயணம் மிக நீண்டது, ஒவ்வொரு நாளும் அவரது பயணத்தை நான் பார்த்திருக்கிறேன்.
சிறிய வீரர்கள் முதல் பெரிய வீரர்கள் வரை அவர்களுடன் தவான் விளையாடியதை பார்த்திருக்கிறேன். அவர் இந்தியாவுக்காக நீண்ட காலம் விளையாடியது மிகவும் மகிழ்ச்சியான விஷயம், ஆனால் அவர் 2023 ஒருநாள் உலகக் கோப்பையை நாட்டுக்காக விளையாடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றார்.
ஷிகர் மிகவும் கடின உழைப்பாளி:
தொடர்ந்து பேசிய அவர், ஷிகர் தவான் சிறுவயதில் இருந்தே விளையாடி வருகிறார். 15 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான அணியில் முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் ஒரு போட்டியில் விளையாடிய பிறகு நீக்கப்பட்டார். பின்னர் அணியில் இருந்தும் நீக்கப்பட்டார். அதற்குப் பிறகு, அடுத்த ஆண்டு 17 வயதுக்குட்பட்டோர் அணியில் கலந்து கொண்ட ஷிகர் தவான் சிறப்பாக விளையாடினார். அதைத் தொடர்ந்து அவருக்கு ஆசிய கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.
தொடர்ந்து முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ஷிகர் தவான் இறுதியாக 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பையை அணியில் இடம் பிடித்தார். எப்படிப்பட்ட பந்து வீச்சாளர்களை சந்திக்க வேண்டும், எந்த உயரத்தில் பந்து வரும், எந்த மாதிரியான வானிலையில் எப்படி விளையாட வேண்டும், பந்து எவ்வளவு ஸ்விங் செய்யும் என்பது அறிந்து அதற்கு ஏற்ற வகையில் ஷிகர் தவான் சிறப்பாக விளையாடக் கூடியவர்.
ஆப் சைட் ஆட்டத்தின் அரண்: