தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து விராட் கோலி விலகல்! - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்

Virat Kohli: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

Virat Kohli
Virat Kohli

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 22, 2024, 5:56 PM IST

டெல்லி: இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் வரும் 25ஆம் தேதி தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 25 முதல் 29ஆம் தேதி வரை ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.

தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 2 முதல் 6ஆம் தேதி வரை விசாகப்பட்டினத்திலும், 3வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 முதல் 19ஆம் தேதி வரை ராஜ்கோட்டிலும், 4வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 23 முதல் 27ஆம் தேதி வரை ராஞ்சியிலும், 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7 முதல் 11ஆம் தேதி வரை தர்மசாலாவிலும் நடைபெறுகிறது.

இந்த தொடரின் முதல் இரு போட்டிகளுக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி முதல் இரு போட்டிகளில் இருந்து விலகி உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

குறிப்பாக சொந்த காரணங்களுக்காக முதல் இரு போட்டிகளில் இருந்து மட்டும் விடுப்பு வேண்டும் என கேட்டுக்கொண்டதை ஏற்று கொண்டதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும், இது குறித்து விவரத்தை கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தேர்வுக்குழு ஆகியோரிடம் விராட் கோலி தெரிவித்துள்ளதாகவும் பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளது. அதேபோல் முதல் இரண்டு போட்டிகளில் விராட் கோலிக்கு மாற்று வீரர் விரைவில் ஆடவர் அணி தேர்வுக் குழுவால் அறிவிக்கப்படும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்திய அணியில் நம்பர் 4ல் இறங்கும் விராட் கோலி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தனிப்பட்ட காரணங்களுக்காக விளையாட முடியாமல் போனதால், அவருக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல்.ராகுலை இடம் உயர்த்தலாம் எனவும், முன்னனி விக்கெட் கீப்பராக கே.எஸ்.பரத் அல்லது துருவ் ஜூரெலை இந்திய அணி கொண்டு வரலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும், இதுவரை இங்கிலாந்து அணிக்கு எதிராக 50 இன்னிங்ஸில் விளையாடிய விராட் கோலி 42.36 சராசரியுடன் 1991 ரன்களை குவித்துள்ளார். அதில் 5 சதங்கள் மற்றும் 9 அரைசதங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:முதல் தர கிரிக்கெட்டில் 20 ஆயிரம் ரன்கள் குவிப்பு.. சாதனை பட்டியலில் இணைந்த புஜாரா!

ABOUT THE AUTHOR

...view details