தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்கள் - சாதனை படைத்த அஷ்வின்!

Ravichandran Ashwin: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த போட்டிகளில் 500 விக்கெட்களை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ரவிச்சந்திரன் அஷ்வின். அவரது சாதனைக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 16, 2024, 4:09 PM IST

ராஜ்கோட்: இந்தியா - இங்கிலாந்து அணிக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நேற்று (பிப்.15) தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 445 ரன்கள் எடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வருகின்றது. இந்த நிலையில், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜாக் கிராலேவின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ரவிச்சந்திரன் அஷ்வின் இந்த சாதனையை படைத்துள்ளார். இதன் மூலம் அவர் குறைந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 500 விக்கெட்களுக்கு மேல் எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இவர் 98 இன்னிங்ஸில் தனது 500வது விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். அதேபோல் தான் வீசிய 25,714வது பந்துகளில் 500 விக்கெட்டை வீழ்த்தி, குறைந்த பந்துகளில் 500 விக்கெட்கள் எடுத்த பட்டியலிலும் இரண்டாவது இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரவிச்சந்திரன் அஷ்வின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்கள், ஒருநாள் போட்டிகளில் 156 விக்கெட்கள், டி20 போட்டிகளில் 72 விக்கெட்கள் என மொத்தம் 728 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

மேலும், ரவிச்சந்திரன் அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த சாதனையை படைத்ததற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்க பதிவின் மூலம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அதில், "சாதனைகளை உடைத்து கனவுகளை உருவாக்கும் சென்னை பையன் அஷ்வின். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 500வது விக்கெட்டை கைபற்றி சாதனை படைத்த ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு வாழ்த்துகள் என பதிவிட்டு உள்ளார்.

மிகக் குறைந்த பந்துகளில் 500 டெஸ்ட் விக்கெட்டுகள்

  • 25528 - கிளென் மெக்ராத்
  • 25714 - ரவிச்சந்திரன் அஷ்வின்
  • 28150 - ஜேம்ஸ் ஆண்டர்சன்
  • 28430 - ஸ்டூவர்ட் பிராட்
  • 28833 - கோர்ட்னி வால்ஷ்

மிகக் குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 500 டெஸ்ட் விக்கெட்டுகள்

  • 87 - முத்தையா முரளிதரன்
  • 98 - ரவிச்சந்திரன் அஷ்வின்
  • 105 - அனில் கும்ப்ளே
  • 108 - ஷேன் வார்ன்
  • 110 - கிளென் மெக்ராத்

இதையும் படிங்க:ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2024; வரலாற்றில் முதல்முறையாக பதக்கத்தை உறுதி செய்த இந்திய மகளிர் அணி!

ABOUT THE AUTHOR

...view details