தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பாரீஸ் பாராலிம்பிஸ்: ஒரே போட்டியில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கம்! - முதல் தங்கம் வென்று அசத்திய ராஜஸ்தான் வீராங்கனை! - firsr Gold medal for India - FIRSR GOLD MEDAL FOR INDIA

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸ் போட்டிகளில், இன்று துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனைகள் தங்கம், வெண்கலம் என்று ஒரே போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

பாராலிம்பிக்சில் தங்கம் வென்ற அவானி லேஹரா
பாராலிம்பிக்சில் தங்கம் வென்ற அவானி லேஹரா (Image Credits - AFP)

By ETV Bharat Sports Team

Published : Aug 30, 2024, 4:33 PM IST

Updated : Aug 30, 2024, 10:12 PM IST

பாரீஸ் (பிரான்ஸ்):பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்றது.

இதில் இந்தியாவின் அவானி லேஹரா 249.7 புள்ளிகளுடன் முதலிடம் பெற்று தங்கம் பதக்கம் வென்றார். இதே போட்டியில் மற்றொரு இந்திய வீராங்கனையான மோனா அகர்வால், 228.7 புள்ளிகளுடன் வெண்கல பதக்கம் வென்றார்.

ஒரே போட்டியில் இந்தியாவுக்கு தங்கம், வெண்கலம் என இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், 2024 பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்க பதக்கத்தை பெற்று தந்தவர் என்ற பெருமையை அவானி லேஹரா பெற்றுள்ளார்.

Last Updated : Aug 30, 2024, 10:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details