பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 33வது ஒலிம்பிக் விளையாட்டு தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஆக.2) கலப்பு இரட்டையர் வில்வித்தை அரைஇறுதியில் இந்தியாவின் அங்கிதா பகத் - தீரஜ் பொம்மதேவரா இணை தென் கொரியாவின் லிம் சி-ஹியோன் - கிம் வூ-ஜின் இணைய எதிர்கொண்டது.
விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் இறுதியில் இந்திய அணி 6-க்கு 2 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியை தழுவி இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை நழுவ விட்டது.
பின்னர், வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் அமெரிக்க அணியின் பிராடி எலிசன் - கேசி காஃப்ஹோல்ட் ஜோடிக்கு எதிராக அங்கிதா பகத் - தீரஜ் பொம்மதேவரா இணை விளையாடியது. இந்த வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்திய அணி முதல் செட்டில் 38-37, 2வது செட்டில் 37-35, 3வது செட்டில் 34-38, 4வது செட்டில் 37-35 பெற்று 6-2 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது.
இதையும் படிங்க:52 ஆண்டுகளுக்கு பின் சாதனை! பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியா ஹாக்கி அணி கால் இறுதிக்கு தகுதி! - paris olympics 2024