அகமதாபாத்:இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 142 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றதுடன், தொடரையும் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிராக அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 356 ரன்களை குவித்தது. 357 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 34.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 214 ரன்கள் மட்டுமே எடுத்தது. 142 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.