பெங்களூரு :இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
இதில், முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2வது நாள் ஆட்டம் நேற்று(அக் 17) தொடங்கி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இந்திய அணி 46 ரன்களுக்கு நியூசிலாந்து அணி சுருட்டியது.
அதன்படி, நியூசிலாந்து அணி தனது இன்னிங்ஸை துவங்கியது. முதலில் களமிறங்கிய லாதம் - கான்வே ஜோடி களமிறங்க, பும்ரா வீசிய முதல் பந்தில் லாதம் பவுண்டரி விளாசி அசத்தினார். அதனைத் தொடர்ந்து கான்வேயும் பவுண்டரி விளாசினார்.
இவ்வாறு அடுத்தடுத்து இருவரும் தங்களது அணிக்காக சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தனர். 10 ஓவர்கள் முடிவிற்கு நியூசிலாந்து அணி 36-0 என்ற கணக்கில் விளையாடியது. இந்நிலையில் 18வது ஓவரில் குல்தீப் வீசிய பந்தில் லாதம் எல்பிடபிள்யூ ஆனார்.
இதற்கிடையில் கான்வே தனது அரை சதத்தை விளாசினார். லாதம் அவுட் ஆக, கான்வேயுடன் யாங் கைகோர்த்து விளையாடினார். ஆனால் அவரும் சரிவர விளையாடவில்லை. 30 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 110 - 1 என்ற கணக்கில் விளையாடியது.
இதையும் படிங்க :ind vs nz: இந்தியாவை 46 ரன்களில் சுருட்டிய நியூசிலாந்து.. 134 ரன்கள் முன்னிலை!
இந்நிலையில் குல்தீப் யாதவ் வீசிய பந்தில் 33 ரன்களுக்கு அவுட் ஆனார் யாங். சிறப்பாக விளையாடிய கான்வேயுடன் அதிரடி பேட்ஸ்மேன் ரச்சின் ரவீந்திரா கைகோர்க்க, கான்வே சதம் விளாசுவார் என எதிர்பார்த்த நிலையில் அஷ்வின் வீசிய அபார பந்து வீச்சில் 91 ரன்களுக்கு போல்ட் ஆனார். களத்தில் இருந்த ரச்சின் உடன் மிட்சல் கைகோர்த்தார். ஆனால் அவரும் 18 ரன்களுக்கு அவுட் ஆனார்.
இந்நிலையில், ரச்சினுக்கு ஜோடி கிடைக்காமல் திணறிகொண்டிருந்தார். அடுத்தடுத்தது வந்த அனைவரும், சொற்ப ரன்னிலும் 20 ரன்களுக்குள்ளேயே விளையாடி அவுட் ஆகினர். இதற்கிடையில் ரச்சின் இந்திய அணியின் மற்ற பவுலர்கள் வீசிய பந்தில் பெரிதாக ரன்கள் ஏதும் எடுக்கவில்லை. 70வது ஓவரில் குல்தீப் வீசிய பந்தில் இரு பவுண்டரிகளை விளாசி தனது அரை சதத்தை பதிவு செய்தார். இவருடம் செளத்தி களத்தில் இருந்தார்.
இருவரும் இணையிலும் நியூசிலாந்து அணிக்கு ரன்கள் குவிந்தன. இருவரும் மாறி. மாறி பவுண்டரி, சிக்ஸ் என விளாசினர். இதற்கிடையில் ரச்சின் தனது சத்தை பதிவு செய்தார். இது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது சதமாகும். ரச்சின் உடன் சிறப்பாக விளையாடி செளத்தி 65 ரன்களுக்கு அவுட் ஆனார். அஜாஸ் படேல் 4 ரன்களுக்கு எல்பிடபிள்யூ ஆக ரச்சின்யுடன் வில்லியம் கைகோர்த்தார்.
ஆனால் ரவீந்திர ஜடேஜா வீசிய பந்தில் ரச்சின் அவுட் ஆக நியூசிலாந்து அணியின் இன்னிங்ஸ் நிறைவு பெற்றது. இந்த இன்னிங்ஸில் நியுசிலாந்து அணி 10 விக்கெட்டுகள் இழப்பிறகு 402 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ரச்சின் 134 ரன்களையும், கான்வே 91 ரன்களையும், செளத்தி 65 ரன்களையும் குவித்தனர். இந்திய அணியில் குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், சிராஜ் 2 விக்கெட்டுகளையும் மற்ற பவுலர்கள் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்தனர்.
இந்நிலையில் தனது 2வது இன்னிங்ஸை தொடங்கி விளையாடி வருகிறது. முதலில் ஜெய்ஸ்வால் - ரோகித் சர்மா ஜோடி களமிறங்கி விளையாடியது. முதல் 3 ஓவர்களுக்கு பவுண்டரி, சிக்ஸ் எதும் இந்திய அணிக்கு கிடைக்கவில்லை. அடுத்த 4வது ஓவரில் ரோகித் இரு பவுண்டரிகளை விளாசி அசத்தினார். ரோகித் சர்மா அரை சதம் விளாசி அசத்தினார். ஜெய்ஸ்வால் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். களத்தில் விராட் கோலி - சர்பராஸ் கான் இணை உள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்