பாரீஸ்:பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 33வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆடவர் ஹாக்கி போட்டியின் கால் இறுதியில் இந்தியா - கிரேட் பிரிட்டன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் இறுதியில் இந்திய அணி பெனால்டி ஷூட் வாய்ப்பில் கிரேட் பிரிட்டனை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரைஇறுதி சுற்றுக்கு முன்னேறியது.
ஆடவர் ஹாக்கியில் கால் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா - கிரேட் பிரிட்டன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் போடாததால் கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து இரண்டாவது 15 நிமிடங்களில் கோல் அடிக்க இரண்டு அணிகளை சேர்ந்த வீரர்களும் கடுமையாக போராடினர்.
இதில், ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அசத்தலாக கோல் அடித்தார். இந்நிலையில் அடுத்த சில நிமிடங்களில் கிரேட் பிரிட்டன் வீரர் பதில் கோல் திருப்பினார். ஆட்டத்தின் 27வது நிமிடத்தில் கிரேட் பிரிட்டன் வீரர் லீ மோர்டன் பதில் கோல் திருப்பினார்.