தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

Border-Gavaskar Trophy: இந்திய அணியில் இருந்து சுப்மான் கில் விலகல்? என்ன காரணம்? - BORDER GAVASKAR TROPHY 2025

இந்திய அணியின் வீரர் சுப்மான் கில்லுக்கு விரலில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Etv Bharat
Shubman Gill (Getty Images)

By ETV Bharat Sports Team

Published : Nov 16, 2024, 3:59 PM IST

ஐதராபாத்: இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டஸ் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. வரும் 22ஆம் தேதி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த் மைதானத்தில் தொடங்குகிறது.

இந்நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் சுப்மான் கில்லுக்கு கை விரல்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் போது அவருக்கு கை விரலில் காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. ஸ்லிப்பில் நின்று பீல்டிங் செய்து கொண்டு இருக்கும் போது அவருக்கு காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

காயத்தின் தீவிரத்தன்மை குறித்து இதுவரை தெரியவராத நிலையில், மருத்துவக் குழு சுப்மான் கில்லை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்க இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், சுப்மான் கில்லுக்கு காயம் ஏற்பட்டு இருப்பது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

காயத்தின் தீவிரத்தன்மை பொறுத்து சுப்மான் கில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவாரா என்பது முடிவு செய்யப்படும் என பிசிசிஐ வட்டாரங்களிடம் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக பயிற்சியின் போது மற்றொரு வீரர் கே.எல் ராகுலுக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் பாதியிலேயே மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

அதேபோல் விராட் கோலியும் காயத்தால் அவதிப்பட்டு வருவதாக தகவல் பரவிய நிலையில் அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் நல்ல உடல் தகுதியுடன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. பெர்ஸ் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா விளையாடாத பட்சத்தில் தொடக்க வீரராக யஷ்ஸ்வி ஜெய்ஸ்வாலுடன், கே.எல் ராகுல் களம் கானுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுவதுமாக இழந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு நுழைய வேண்டும் என்றால் இந்திய அணிக்கு உள்ள ஒரே வாய்ப்பு அது பார்டர் கவாஸ்கர் டிராபி தான். ஆஸ்திரேலியாவை 4-க்கு 0 அல்லது 5-க்கு 0 என்ற கணக்கில் வீழ்த்தினால் மட்டுமே இந்திய அணியால் நேரடியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும். இல்லையெனில் இலங்கை, நியூசிலாந்து உள்ளிட்ட அணிகளின் முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:உலக சாதனை படைத்த சஞ்சு - திலக் ஜோடி! ஆனாலும் ஜப்பான், ஜிம்பாப்வேயை முந்த முடியல!

ABOUT THE AUTHOR

...view details