பல்லேகலே:இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று (ஜூலை 30) பல்லேகலே மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் - சுப்மன் கில் ஜோடி களமிறங்கியது. 2வது ஓவரில் ஜெய்ஸ்வால் தீக்ஷனா வீசிய பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், சூர்யகுமார் யாதவ் ஆகிய 3 வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆகினர். அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது.
பின்னர் களத்தில் சுப்மன் கில் உடன் ஷிவம் துபே கைகோர்க்க அவரும் பெரிதாக ரன் குவிக்கவில்லை. சுப்மன் கில்லுக்கு பார்ட்னர் அமையாமல் திகைத்து நிற்க, ரியான் பராக் கைகோர்த்தார். இருவரும் நிதானமாக விளையாடி அணிக்கு ரன்களைக் குவிக்க ஆரம்பித்தனர். 13 ஓவர் முடிவிற்கு 81- 5 என்ற கணக்கில் இந்திய அணி விளையாடியது.
ரியான் பராக் சிக்ஸ் மற்றும் பவுண்டரிகளை மாறி மாறி விளாச இருவரின் பார்ட்னர்ஷிப்பில் 50 ரன்கள் குவிந்தன. இந்நிலையில், ஹசரங்க வீசிய பந்து ஸ்டெம்பில் பட சுப்மன் கில் அவுட் ஆனார். பின்னர், அதே ஓவரில் பார்டனர் ரியான் பராக் ஆட்டமிழந்தார்.