ஐதராபாத்:இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி முதல் இன்னிங்சில் 233 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.
முதல் பந்தே சிக்சர்:
இந்திய அணியின் இன்னிங்சை தொடக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் தொடங்கினர். முதல் பந்தையே சிக்சருக்கு பறக்கவிட்ட ரோகித் சர்மா தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு உறுதுணையாக மற்றொரு தொடக்க வீரர் ஜெய்ஸ்வால், வங்கதேச வீரர் ஹசன் மஹ்மூத் ஓவரில் அடுத்தடுத்து மூன்று பவுண்டரிகளை ஓடவிட்டார்.
இதனால் 3 ஓவர்களில் இந்திய அணி 50 ரன்களை கடந்தது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக குறைந்த பந்தில் 50 ரன்கள் குவித்த முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது. இதற்கு முன் இதே ஆண்டில் இங்கிலாந்து அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 4.2 ஓவர்களில் 50 ரன்களை கடந்ததே முந்தைய சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதிவேக 50 ரன்:
அதற்கு முன்னரும் இதே இங்கிலாந்து அணி 1994ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 4.3 ஒவர்களில் 50 ரன்களை கடந்தது குறிப்பிடத்தக்கது.
அதிவேக டெஸ்ட் அரை சதம்:
3 ஓவர்கள் - இந்தியா vs வங்களதேசம், 2024