சென்னை: டி20 உலகக் கோப்பை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. உலகக் கோப்பை டி20 தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 8 சுற்று நடைபெற்று வரும் நிலையில், குரூப் 1இல் அரையிறுதிக்கு முன்னேற இந்தியா, ஆஸ்திரேலியா, ஆஃப்கானிஸ்தான், வங்கதேச அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
அதே வேளையில் குரூப் 2இல் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா இடையே போட்டி நிலவுகிறது. இந்தியா அணி சூப்பர் 8 சுற்றில் எதிர்கொண்ட ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகளை வென்ற நிலையில், இன்று ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. ஆஸ்திரேலியா கடைசியாக விளையாடிய ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்ததால் இன்று இந்தியாவிற்கு எதிராக கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்குகிறது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் ஆஃப்கானிஸ்தான் வெற்றி பெற்றது, இந்த உலகக் கோப்பையில் திருப்புமுனையை ஏற்படுத்தி விறுவிறுப்பை கூட்டியுள்ளது. அது மட்டுமின்றி, இன்று இந்தியா அணி தோற்கும் பட்சத்தில் மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியை எதிர்நோக்கி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இந்நிலையில் அரையிறுதிக்கு தகுதி பெற இந்தியாவிற்கு வாய்ய்பு எப்படி உள்ளது என பார்க்கலாம்
1.இன்றைய போட்டியில் இந்தியா வெல்லும் பட்சத்தில் அரையிறுதிக்கு எந்தவித பிரச்சனையும் இன்றி தகுதி பெறும்.