சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஜோஸ் பட்லர் 30 பந்துகளில் 45 ரன்கள் (4 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) எடுத்து அபாரமாக ஆடினார். பிரையன் கார்ஸ் 17 பந்துகளில் 31 ரன்கள் (1 பவுண்டரி, 3 சிக்சர்கள்) எடுத்து அசத்தினார். இந்திய அணி தரப்பில் வரூண் சக்ரவர்த்தி மற்றும் அக்ஷர் படேல் இருவரும் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 166 ரன்களை இலக்காக இந்திய அணிக்கு நிர்ணையிக்கப்பட்டது. இந்திய அணிக்கு தொடக்கத்திலே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா (12) மற்றும் சஞ்சு சாம்சன் (12) ஆகியோர் வந்த வேகத்தில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். பின்னர், கேப்டன் சூர்யகுமார் யாதவ் (12) மற்றும் ஹர்திக் பாண்டியா (7) ஆகியோராலும் அதிக நேரம் தாக்கு பிடித்து விளையாட முடியவில்லை.