தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை படைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.. 10 விக்கெட்டுகளும் சரிந்தது எப்படி? - SRH All out - SRH ALL OUT

IPL 2024 Final: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 113 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்தது.

ரசல் மற்றும் ஸ்டார்க், விக்கெட்டை வீழ்த்திய தருணம்
ரசல் மற்றும் ஸ்டார்க், விக்கெட்டை வீழ்த்திய தருணம் (credits - AP)

By PTI

Published : May 26, 2024, 9:23 PM IST

சென்னை: ஐபிஎல் போட்டியின் லீக் போட்டிகள் தொடங்கி பல்வேறு நாடுகளில் நடைபெற்று முடிந்தன. அந்த வகையில், இறுதிப் போட்டியில் இன்று (மே26) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை காண்கின்றன.

இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, தொடக்க வீரர்களாக அபிஷேக் ஷர்மா - டிராவிஸ் ஹெட் ஜோடி களமிறங்கியது.

முதல் ஓவரிலேயே ஹைதராபாத் அணிக்கு பெரிய விக்கெட் விழுந்தது. இதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். எதிர்முனையில் ஸ்டார்க் வீசிய அபார பந்தில் அபிஷேக் ஷர்மா வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார்.

2வது ஓவரில், வைபவ் அரோரா வீசிய பந்தை டிராவிஸ் ஹெட் விளாச, குர்பாஸ் பிடித்த கேட்சில் ரன்கள் எடுக்காமல் டிராவிஸ் ஹெட் அவுட் ஆனார். 5வது ஓவரில், ஸ்டார்க் வீசிய பந்தைச் சமாளிக்க முடியாமல் ராகுல் திரிபாதி பந்தை பவுண்டரிக்காக ஓங்கி விளாச, அது ரமன்தீப்பிடம் சிக்கி தனது விக்கெட்டை இழந்தார் ராகுல் திரிபாதி.

7வது ஓவரில் ரானா வீசிய அபார பந்தை அடிக்க முயன்ற நித்திஷ் ரெட்டி, குர்பாஸ்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இவ்வாறு அடுத்தடுத்து ஹைதராபாத் அணிக்கு விக்கெட்டுகள் சரிந்தன. 11வது ஓவரை ரசல் வீச, எதிர் முனையில் இருந்த மார்க்ராம் அவுட் ஆனார். மார்க்ராம், தான் இதுவரை விளையாடிய வீரர்களில் அதிகபட்சமாக 20 ரன்களைக் குவித்தார்.

12வது ஓவரில், நரைன் வீசிய பந்தில் ஷாபாஸ் அகமது வெறும் 8 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். 13வது ஓவரில் இம்பக்ட் பிளேயர் அப்துல் சமத், ரசல் வீசிய அபார பந்தில் அவுட் ஆனார். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஹைதராபத் அணி திணறியது.

15வது ஓவரில் ரானா வீசிய பந்தில் கிளாசன் க்ளீன் போல்ட் ஆனார். 18வது ஓவரில் ஜெய்தேவ் உனத்கட் எல்பிடபிள்யூ ஆனார். 19வது ஓவரில் கம்மின்ஸ் ரசல் வீசிய பந்தில் ஸ்டார்க்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதுவரை விளையாடிய ஐபிஎல் போட்டிகளில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இதுவே மோசமான போட்டியாகும். இதனால் 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்களை மட்டுமே ஹைதராபாத் அணி எடுத்துள்ளது. முன்னதாக, 2013ஆம் ஆண்டு மும்பை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சென்னை அணி 125 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது

இதையும் படிங்க:ஐபிஎல் இறுதிப் போட்டி 2024; ஆதிக்கத்தின் உச்சியில் கொல்கத்தா அணி.. திணறும் ஹைதராபாத்! - SRH VS KKR

ABOUT THE AUTHOR

...view details