ஐதராபாத்: இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பல சாதனைகள் முறியடிக்கப்பட்டு புது வரலாறு படைக்கப்பட்டுள்ளன. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து வீரர்கள் ஜோ ரூட் - ஹாரி ப்ரூக் கூட்டணி 4வது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து 454 ரன்கள் குவித்தனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்றில் 4வது விக்கெட்டுக்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் இது என்பது குறிப்பிடத்தக்கது. 1877 ஆம் ஆண்டு முதல் கிரிக்கெட் விளையாடப்பட்டு வரும் நிலையில் டாட் பிராட்மேன், சச்சின் தெண்டுல்கர், நான்கு சதம் விளாசிய பிரைன் லாரா உள்ளிட்ட ஜாம்பவான்கள் கூட இந்த சாதனையை படைத்ததில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் கடந்த 2015ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் சான் மார்ஷ் மற்றும் ஆடம் வோக்ஸ் கூட்டணி அமைத்து 449 ரன்கள் குவித்ததே அதிகபட்சமாக இருந்தது. ஹாரி ப்ரூக் - ஜோ ரூட் இணைந்து அடித்த 454 ரன், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாக அறியப்படுகிறது.
அந்த வகையில் கடைசியாக 1934ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் 451 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. அதேபோல் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அடித்த வீரர்கள் என்ற சாதனையையும் ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகியோர் படைத்தனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் பார்ட்னர்ஷிப்பில் அதிக ரன்கள் குவித்தர்கள் பட்டியல்:
- ஜெயவர்தனே - குமார சங்கக்கரா (இலங்கை) 624 ரன் கொழும்புவில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 20006ஆம் ஆண்டு,
- ஜெயசூர்யா - ஆர்.மஹனமா (இலங்கை) 576 ரன், கொழும்புவில் இந்தியாவுக்கு எதிராக 1997ஆம் ஆண்டு,
- மார்டின் க்ரோவ் - ஆண்ட்ரூ ஜோன்ஸ் (நியூசிலாந்து) 467 ரன் இலங்கைக்கு எதிரான வெலிங்டனில் 1999 ஆம் ஆண்டு,
- ஜோ ரூட் - ஹாரி ப்ரூக் (இங்கிலாந்து) 454 ரன் பாகிஸ்தானுக்கு எதிரான முதல்தானில் 2024ஆம் ஆண்டு.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் தனது முதல் முச்சதத்தை விளாசினார். மேலும் அதிவேகமாக முச்சதம் விளாசிய வீரர் என்ற சாதனையையும் ஹாரி ப்ரூக் படைத்தார். அவர் 310 பந்துகளில் 28 பவுண்டரி 3 சிக்சர் உள்பட 317 ரன்கள் குவித்தார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக முச்சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை இந்திய வீரர் விரேந்தர் சேவக் (278 பந்து) தன் வசம் வைத்து உள்ளார்.
அதேபோல் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் (மொத்தம் 262 ரன்) இரட்டை சதம் விளாசினார். மொத்தம் 350 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட் அதில் 51 சதம் 108 அரைசதம் உள்பட 20 ஆயிரம் ரன்கள் குவித்துள்ளார். மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசியவர்களின் பட்டியலில் சுனில் கவாஸ்கர், பிரைன் லாரா, மஹேலா ஜெயவர்தனே, யுனிஸ் கான் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி ஜோ ரூட் 6வது இடத்தை பிடித்துள்ளார்.
இதையும் படிங்க:ஜெயிச்சாலும்.. தோற்றாலும் பிரச்சினை தான்! சிக்கலில் தவிக்கும் இந்திய அணி!