ஐதராபாத்:சையது முஷ்டாக் அலி டிராபி கிரிக்கெட் தொடரில் நேற்று (நவ.23) இந்தூர் மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பரோடா - குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் குஜராத் அணிக்கு எதிராக பரோடா வீரர் ஹர்திக் பாண்ட்யா 7 ரன்கள் அடித்த போது 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் புது மைல்கல் ஒன்றை படைத்தார்.
20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் 5 ஆயிரம் மற்றும் 100க்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் வீழ்த்த முதல் இந்திய வீரர் என்ற புது சாதனையை படைத்தார். 20 ஓவர் கிரிக்கெட் பார்மட்டில் மட்டும் ஹர்திக் பாண்ட்யா இதுவரை 5 ஆயிரத்து 67 ரன்களும், 180 விக்கெட்டுகளும் வீழ்த்தி உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ரவீந்திர ஜடேஜா 3 ஆயிரத்து 684 ரன்களும், 225 விக்கெட்டுகளும் வீழ்த்தி இரண்டாவது இடத்தில் உள்ளனர்.
மூன்றாவது இடத்தில் அக்சர் பட்டேல் 2 ஆயிரத்து 960 ரன்கள் மற்றும் 227 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யாவின் சகோதரர் குர்னல் பாண்ட்யா 2 ஆயிரத்து 712 ரன், 138 விக்கெட்டுகளுடன் 4வது இடத்திலும் உள்ளனர். முன்னதாக டாஸ் வென்ற பரோடா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது.