ஹைதராபாத்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டி கோலாகலமாக தொடங்கியது. பாராலிம்பிக்ஸ் தொடக்க விழாவில், இந்திய வீரர்கள் சுமித் அன்டில் மற்றும் பாக்யஸ்ரீ ஜாதவ் தேசியக் கொடியை ஏந்திக்கொண்டு இந்திய அணியை வழிநடத்திச் சென்றனர்.
அந்த வகையில், இன்று பாராலிம்பிக்ஸ் நடைபெறுவதை உணர்த்தும் வகையில், கூகுள் தனது டூடுலை மாற்றி உள்ளது. கூகுளானது சில முக்கியமான நாட்கள், சில முக்கியமான நிகழ்வுகளின் போது தனது டூடுலை மாற்றி, அந்த நாளை பயனர்களுக்கு உணர்த்துகின்றது.
அந்த வகையில், தற்போது பாராலிம்பிக்ஸ் நடைபெற்று வருவதால், இன்றைய தினம் கூகுள் தனது டூடுலினை மாற்றி உள்ளது. இன்றைய பாராலிம்பிக்ஸ் போட்டியில் கூடைப்பந்து போட்டியினை பயனர்களுக்கு உணர்த்தும் விதமாக, கூகுள் தனது டூடுலில் சக்கர நாற்காலியில் பறவைகள் உட்கார்ந்து கூடைப்பந்து விளையாடுவது போன்று மாற்றம் செய்துள்ளது.
அந்த டூடுலினை க்ளிக் செய்தால் இன்றைய போட்டிக்கான அட்டவணையைக் காணலாம். மேலும், இன்றைய போட்டியில் குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலிய அணி - நெதர்லாந்து அணிகளுக்கான போட்டி (இந்திய நேரப்படி) அதிகாலை 1 மணி அளவில் நிறைவு பெற்றது. இப்போட்டியில் நெதர்லாந்து அணி 66-55 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. மேலும், இன்று மாலை 4.15 மணிக்கு ஸ்பெயின் அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.
சக்கர நாற்காலி வரலாறு: சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டியானது கடந்த 1945ஆம் ஆண்டு முதன்முதலில் அமெரிக்காவில் உள்ள இரண்டு மருத்துவமனைகளில் விளையாடப்பட்டது. கடந்த 1960ஆம் ஆண்டு ரோமில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் போட்டியில் சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டி சேர்க்கப்பட்டது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க :சிக்சருடன் கேரியரை தொடங்கிய வீரர்கள்! பட்டியலில் 2 இந்திய வீரர்கள்! யாரார் தெரியுமா? - players hit six on his first ball