கட்டாக்: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
ஒடிசா மாநிலம், கட்டாக்கில் உள்ள பாராபதி மைதானத்தில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோல் பட்லர் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 49.5 ஓவர்கள் முடிவில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 304 ரன்களை எடுத்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான பென் டக்கட் 56 பந்துகளில் 65 ரன்கள் குவித்தார். இதில் 10 பவுண்டரிகளும் அடங்கும். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஜோ ரூட் 69 ரன்களை எடுத்தார். கேப்டன் ஜோல் பட்லர் தன் பங்கிற்கு 34 ரன்கள் எடுத்தார்.
அதிரடி ஆட்டக்காரரான லேம் லிவிங்ஸ்டோன் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 27 பந்துகளில் 33 ரன்கள் விளாசினார். ஆட்டத்தின் இறுதிகட்ட ஒவர்களில் அடில் ரஷித் மூன்று பவுண்டரிகளுடன் 5 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்புகள் 305 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக, ரவீந்திர ஜடேஜா 10 ஓவர்களில் வெறும் 35 ரன்களை மட்டும் விட்டுகொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார. 306 ரன்கள் எடுத்தால் வெற்றி என்பதுடன், இத்தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி அடுத்து விளையாட உள்ளது.