பெங்களூரு: 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மே.12) இரவு 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் 62வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் பட்டேல் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடப்பு ஐபிஎல் சீசனில் தரவரிசை பட்டியலில் 10 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. இந்த சீசனில் இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் பெங்களூரு அணி 5ல் வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 12 போட்டிகளில் விளையாடி 6ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 5வது இடத்தில் இருக்கிறது.
இரண்டு அளிகளுக்குமே அடுத்த சுற்றான பிளே ஆப்க்கு தகுதி பெற வாய்ப்பு உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் பிளே ஆப் வாய்ப்பில் தொடர முடியும். அதேநேரம் தோல்வியை சந்திக்கும் பட்சத்தில் பிளே ஆப் வாய்ப்பு என்பது குறைவு தான். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இதுவரை 29 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன.