தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

DC vs MI Toss : டாஸ் வென்று டெல்லி பந்துவீச்சு தேர்வு! முதல் வெற்றி பெறுமா மும்பை? - IPL 2024

IPL 2024: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்து உள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 7, 2024, 3:25 PM IST

மும்பை :17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் கோலகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.7) பிற்பகல் 3.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 20வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்து உள்ளார். மும்பை அணியில் நீண்ட நாட்களுக்கு பிறகு சூர்யகுமார் யாதவ் களம் திரும்பி உள்ளார். குடலிறக்க பிரச்சினை காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட சூர்யகுமார் யாதவ் ஏறத்தாழ 3 மாதங்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளார்.

விளையாடிய மூன்று ஆட்டங்களில் தோல்வியை தழுவிய மும்பை அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதேபோல் டெல்லி அணியும் கடைசி ஆட்டத்தில் கொல்கத்தா அணியிடம் 106 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டு அந்த தோல்விக்கு மருந்து போட டெல்லி அணியும் முயற்சிக்கு.

வெற்றிக்காக இரு அணி வீரர்களும் கடுமையாக விளையாடுவார்கள் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. போட்டி நடைபெறும் மும்பை வான்கடே மைதானம் மும்பை அணிக்கு வெற்றியை தேடித் தருமா அல்லது சொந்த ஊரிலே மும்பையை வீழத்தி டெல்லி கேபிட்டல்ஸ் அணி வெற்றி வாகை சூடுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

போட்டிக்கான இரு அணி வீரர்கள் பட்டியல் :

மும்பை இந்தியன்ஸ் : ரோகித் ஷர்மா, இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), டிம் டேவிட், முகமது நபி, ரொமாரியோ ஷெப்பர்ட், பியூஷ் சாவ்லா, ஜெரால்ட் கோட்ஸி, ஜஸ்பிரித் பும்ரா.

டெல்லி கேபிட்டல்ஸ் : டேவிட் வார்னர், ப்ரித்வி ஷா, அபிஷேக் போரல், ரிஷப் பந்த் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், லலித் யாதவ், ஜே ரிச்சர்ட்சன், அன்ரிச் நார்ட்ஜே, இஷாந்த் சர்மா, கலீல் அகமது.

இதையும் படிங்க :MI Vs DC: மும்பை அணியில் மீண்டும் சூர்யகுமார் யாதவ்! முதல் வெற்றி பெறுமா? - Suryakumar Back MI

ABOUT THE AUTHOR

...view details