தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ரூ.27 லட்சம் சம்பளம், 50 நாட்கள் விடுமுறை! ரொனால்டோ ஹோட்டலில் காத்திருக்கும் வேலை! Rs.27 Lakh Salary in Ronaldo Hotel - RONALDO MADRID HOTEL RECURITMENT

Ronaldo Hotel Recuritment: 27 லட்சத்து 50 ஆயிரம் ஊதியம், 50 நாட்கள் விடுமுறை என கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோவின் ஹோட்டல்களில் பணியாற்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Etv Bharat
Cristiano Ronaldo (IANS Photo / ETV Bharat)

By ETV Bharat Sports Team

Published : Oct 10, 2024, 5:19 PM IST

ஐதராபாத்:உலகின் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரராக போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அறியப்படுகிறார். 39 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்து விளையாட்டு தவிர்த்து பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார். அதில் ஒன்று ஹோட்டல் தொழில்.

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ரொனால்டோ நட்சத்திர ஹோட்டல்களை நடத்தி வருகிறார். Pestana ஹோட்டல் குழுமத்துடன் இணைந்து ரொனாலடோ ஹோட்டல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். ஏறத்தாழ 30 மில்லியன் பவுண்டு தொகையை ரொனால்டோ முதலீடு செய்துள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pestana CR7 Gran Via என்ற பெயரில் போர்ச்சுகளில் உள்ள மேட்ரியாவின் பஞ்சல் (Funchal) நகரத்தில் ரொனால்டோ தனது முதல் ஹோட்டலை தொடங்கினார். தொடர்ந்து மாட்ரிட் (Madrid), பஞ்சல் (Funchal), லிஸ்பன் (Lisbon), மராகெச் (Marrakech) மற்றும் நியூ யார்க் ஆகிய ஐந்து நகரங்களில் தற்போது ரொனால்டோவின் ஹோட்டல்கள் இயங்கி வருகின்றன.

உலகின் ஐந்து பெருநககரங்களில் ரொனால்டோவின் Pestana CR7 Gran Via Hotel என்ற விடுதி வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இந்நிலையில், தற்போது மாட்ரிட்டில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பல்வேறு பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. வெய்டர், சூப்பர்வைசர், ரிசப்செனிஸ்ட், பார் அசிஸ்டென்ட், ஜூனியர் வெய்டர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

என்ன தகுதி?:

பிரஸ்டானா கிரான் வியா ஹோட்டலில் பணியில் சேர தேர்வர்கள் அந்தெந்த துறைகளில் கல்வி மற்றும் பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும் மற்றும் திறம்பட ஆங்கிலத்தில் எழுத மற்றும் பேச தெரிந்து இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2021ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் ஹோட்டலில் நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சம்பளம் எவ்வளவு?:

வாயை பிளக்கும் அளவுக்கு சம்பளம் அறிவிக்கப்பட்டு உள்ளது. ரொனால்டோவின் ஹோட்டலில் பணியில் சேருபவர்களுக்கு இந்திய மதிப்பில் 27 லட்சத்து 50 ஆயிரம் ஊதியம், 50 நாட்கள் விடுமுறை, பிறந்த நாள் போனஸ், அனைத்து ஹோட்டல் பார்கள் மற்றும் உணவு விடுதிகளில் 50 சதவீதம் தள்ளுபடி மற்றும் இலவச காப்பீடு என பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அண்மையில் யூடியூப் தளத்தில் இணைந்த கிறிஸ்டியானா ரொனால்டோ பல்வேறு சாதனைகளை படைத்து யூடியூப் தளத்திலேயே அதிக பின் தொடர்வோரை கொண்ட நபர் என்ற சாதனையை படைத்தார். 39 வயதான ரொனால்டோ தற்போது யுஇஎப்ஏ தேசிய லீக் தொடரில் கலந்து கொள்ள பயிற்சி மேற்கொண்டு வருகிறார். போர்ச்சுகல் அணி போலந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளை எதிர்கொள்ள உள்ளது.

இதையும் படிங்க:டென்னிசில் இருந்து ரபேல் நடால் ஓய்வு! Rafael Nadal Announce Retirement!

ABOUT THE AUTHOR

...view details