ஐதராபாத்: முப்பரிமாணங்களை கொண்ட கிரிக்கெட்டின் முக்கியத்தக்க அம்சமாக டி20 பார்மட் காணப்படுகிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களை மட்டுமே கண்டு களித்த ரசிகர்களுக்கு புது ரசனை மற்றும் த்ரிலிங்கை கொடுக்கும் போட்டியாக 20 ஓவர் கிரிக்கெட் மாறியது.
முதன் முதலாக 2005ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் இடையே ஆக்லாந்தில் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பல்வேறு பரிமாணங்களில் டி20 கிரிக்கெட் போட்டி விசாலமடைந்தது. ஐபிஎல், ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக் என 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் பல்வேறு நாடுகளில் புதிய பெயர்களில் லீக் தொடராக தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
20 ஓவர் கிரிக்கெட் மீதான ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுவதற்கு ஏற்றார் போல் லீக் ஆட்டங்களில் சில விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு மெருகேற்றப்படுகின்றன. டி20 கிரிக்கெட்டின் அடுத்த கட்ட தற்போது டி10 கிரிக்கெட் லீக் தொடர்களும் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த டி20 லீக் தொடர்கள் மூலம் தங்கள் நாட்டு அணிக்காக மட்டுமே விளையாடி வந்த வீரர்கள் அதைத் தாண்டி உலக அளவில் பல்வேறு அணிகளுக்காக விளையாடத் தொடங்கினர்.
அதற்கு பிசிசிஐயின் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தான் அச்சாரம் போட்டது. 2008ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட்ட நிலையில், அதன் வெற்றியைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் 20 ஓவர் லீக் தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஐபிஎல் போன்ற லீக் தொடர்கள் வருவதற்கு முன்னர் வரை சொந்த நாட்டு அணிக்காக விளையாடுவதன் மூலம் வரும் தொகை மற்றும் விளம்பரம் உள்ளிட்டவற்றின் மூலமே வீரர்கள் வருவாய் ஈட்டி வந்தனர்.
டி20 லீக் தொடர்களுக்கு பின் வீரர்கள் உலக அளவில் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு விளையாடுகின்றனர். இந்நிலையில், ஐபிஎல் போன்ற 20 ஓவர் லீக் தொடர்களில் விளையாடுவதில் கவனம் செலுத்தி சொந்த நாட்டு மத்திய ஒப்பந்தத்தை இழந்த வீரர்கள் சில பேரை தற்போது காணலாம்.
முகமது ஹபீஸ்: பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் முகமது ஹபீஸ், லீக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில் அதிக ஆர்வம் செலுத்திய அடுத்து உள்நாட்டு போட்டிகளில் சரிவர விளையாடத் தொடங்கினார். இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவரை சி பிரிவு வீரர்கள் பட்டியலுக்கு இறக்கி சம்பளத்தையும் கணிசமாக குறைத்தது.