அனந்த்நாக்: ஒட்டுமொத்த நாட்டையும் 6 முதல் 8 பேர் கொண்ட கும்பல் வழிநடத்தி வருவதாகவும் மேலும் தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா நியமிக்கப்பட்டு இருப்பதகாவும் காங்கிரஸ் முன்னாள் த்லைவர் ராகுல் காந்தி பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், ராகுல் காந்தி இது குறித்து பேசியுள்ளார். அதில் "நாட்டின் ஒட்டுமொத்த வணிக ஒப்பந்தங்கள் 3 முதல் 4 பேருக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன. மத்திய அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா தன் வாழ்நாளில் கிரிக்கெட் பேட்டை பிடித்து விளையாடி இருப்பாரா என்று கேட்டால் யாருக்கும் தெரியாது ஆனால் இன்று அவர் தான் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர்" என்று அந்த வீடியோவில் ராகுல் காந்தி பேசி உள்ளார்.