பாரீஸ்:பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 17வது பாராலிம்பிக்ஸ் விளையாட்டு தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (செப்.3) ஒரே நாளில் இந்தியா 2 தங்கம், 3 வெள்ளி உள்பட 8 பதங்களை வென்று குவித்து வரலாறு படைத்தது. பாராலிம்பிக்ஸ் வரலாற்றில் இந்தியா ஒருநாளில் வென்ற அதிகபட்ச பதக்கங்களின் எண்ணிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ஆடவர் பேட்மிண்டன் போட்டியில், இந்திய வீரர் நிதேஷ் குமார் விளையாடும் போது வர்ணனையாளர் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலியின் பெயரை குறிப்பிட்டு கூறிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. போட்டியின் நடுவே பேசிய வர்ணனையாளர் நிதேஷ் குமாரின் மனம் கவர்ந்த விளையாட்டு வீரர் விராட் கோலி என்றார்.
விராட் கோலி அருமையான கிரிக்கெட் வீரர் என்று குறிபிட்ட வர்ணனையாளர், பெரும்பாலான இந்தியர்கள் விராட் கோலியை தங்களது ஹீரோவாக பார்ப்பதாக கூறினார். மேலும் இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்திய விராட் கோலி, பல விளையாட்டு வீரர் வீராங்கனைகளின் முன்மாதிரியாக திகழ்கிறார் என்று வர்ணனையாளர் தெரிவித்தார்.