சென்னை: ஐபிஎல் 2024, 17வது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியே சென்னை சூப்பர் கிங்ஸுக்கும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே நடைபெறுகிறது. இந்த நிலையில், சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி சென்னை வந்து அடைந்துள்ளார்.
பொதுவாக, ஐபிஎல் தொடர்கள் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே போட்டி ஆரம்பிக்கும் இடத்திற்கு வருகை தந்து, பயிற்சியை மேற்கொள்வதுதான் தோனியின் வழக்கம். ஆனால், இம்முறை 16 நாட்களுக்கு முன்பாக தோனி சென்னை வந்துள்ளார்.
முன்னதாக, குஜராத் ஜாம்நகரில் ஆனந்த் அம்பானியின் பீரி வெட்டிங் நிகழ்ச்சி மிக விமர்சையாக நடைபெற்றது. அதில் எம்.எஸ் தோனி தனது மனைவி சாக்ஷியுடன் கலந்து கொண்டார். அது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது.