ஐதராபாத்: இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. மைதானத்தில் மட்டுமின்றி பொது வாழ்விலும் அவர் குறித்து அரசல் புரசலாக பல்வேறு கருத்துகள் வைரலாகி வருகின்றன. அண்மையில் தனது மனைவி நடாஷா ஸ்டான்கோவிக்கிடம் இருந்து ஹர்திக் பாண்டியா விவாகரத்து பெற்றார்.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின்னர் நீண்ட ஓய்வில் இருக்கும் ஹர்திக் பாண்டியா, கிரீஸ் நாட்டில் தனது விடுமுறை கழித்தார். மேலும் ஹர்திக் பாண்டியா பிரிட்டன் பாடகி ஜாஸ்மீன் வாலியாவுடன் தனது விடுமுறையை கழித்து வருவதாக தகவல்கள் பரவியது. இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும், ஒரே இடத்தில் இருவரும் மாற்றி மாற்றி எடுத்துக் கொண்ட புகைப்படங்களை குறிப்பிட்டு ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
முன்னதாக பாலிவுட் நடிகை அனன்யா பாண்டேவுடன், ஹர்திக் பாண்டியா நெருங்கி பழகி வருவதாகவும் இருவரும் டேடிட்ங்கில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் பரவியது. இந்நிலையில், பாலிவுட் நடிகை ஒருவர் பேட்டி ஒன்றில் ஹர்திக் பாண்டியாவை தான் விரும்புவதாக தெரிவித்து இருப்பது புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.
பாலிவுட் நடிகை இஷிதா ராஜ், அண்மையில் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தான் ஹர்திக் பாண்டியாவை விரும்புவதாக தெரிவித்துள்ளார். பேட்டியில் பேசிய அவர், "எனக்கு கிரிக்கெட் மிகவும் பிடிக்கும். குறிப்பாக ஹர்திக் பாண்டியா என்றால் அளவு கடந்து பிடிக்கும். அவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர்.