பாரீஸ்: 33வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த ஜூலை 26ஆம் தேதி பிரம்மாண்ட தொடக்க விழாவுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளான இன்று (ஜூலை.29) நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர் அர்ஜூன் பபுதா விளையாடினார்.
தொடக்க முதலே அபாரமாக விளையாடி வந்த அர்ஜூன் பபுதா பதக்கத்திற்கான வாய்ப்பில் நீடித்து வந்தார். வெளியேற்றுதல் சுற்றுகளில் முறையே 10.6 மற்றும் 10.8 அதையடுத்து 9.9 மற்றும் 10.6 என அடுத்தடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டாவது இடத்தில் முன்னிலை வகித்து வந்தார்.