மேஷம்:இந்த வாரத்தில் உங்களுக்கு,இல்லற வாழ்வில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிலவும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் கிடைக்கும் என்றாலும் சில காரணங்களால் சில சங்கடங்கள் ஏற்படும். நீங்கள், புதிய வீடு வாங்க நினைத்தால் பத்திரம் சார்ந்த செயல்பாடுகளில் கவனத்துடன் இருக்க வேண்டும். தொழில் புரிபவர்களுக்கு இந்த வாரம் சிறப்பானதாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
பணிபுரிபவர்கள் பழைய வேலையிலேயே இருப்பது நல்லது. கல்வியில் வெற்றி காண்பீர்கள். உயர்கல்விக்கு ஏற்ற காலமிது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி ஏற்றுமதி தொழில் செய்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். வீட்டிலிருந்து ஆன்லைனில் வேலை செய்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்குமென்று சொல்ல முடியாது. திருமணமாகாதவர்களிடம் திருமணம் பற்றி பேசுவதால் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.
ரிஷபம்:தாம்பத்திய வாழ்வில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். காதல் உறவுகளிலும் இனிமை இருக்கும். இந்த வாரம் கடன் வாங்க நினைப்பவர்களுக்கு எளிதாக கிடைக்கும். இந்த நேரம், முதலீட்டிற்கும் சிறந்தது. உங்கள் பொருளாதார நிலை மேம்படும். இன்று நீங்கள், திடீரென்று சில ஒப்பந்தங்களால் நிறைய நன்மைகளைப் பெறுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் வேலைமாற்றம் குறித்து மிகவும் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.
மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவார்கள். ஆனால், படிப்பில் குறைந்த கவனம் செலுத்துவதால் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற முடியாமல் போகலாம். இதற்கு காரணம், சில மோசமான நண்பர்களின் சகவாசம். முன்பைவிட ஆரோக்கியம் மேம்படும். உங்கள் அன்றாட வழக்கத்தில் யோகா பயிற்சியையும், தியானத்தையும் சேர்த்துக்கொள்வது நல்லது.
மிதுனம்: வாழ்க்கைத் துணையுடன் நீண்ட நாட்களாக இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கி உறவுகளில் நெருக்கம் அதிகரிக்கும். நண்பர் ஒருவரால் காதல் உறவில் சில குழப்பங்கள் ஏற்படலாம். வீட்டை அலங்கரிக்க சிறிது பணம் செலவழிப்பீர்கள். எந்த ஒரு கொடுக்கல் வாங்கலையும் மிகவும் கவனமாக செய்தால் நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்கள், மேலதிகாரிகளிடம் பேசும்போது பேச்சில் இனிமையை கடைபிடிக்க வேண்டும்.
புதிய வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்த மாட்டார்கள். புதிய வேலைக்கு நேரம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கங்கள் இருக்கும் என்பதால் நல்ல மருத்துவரை அணுகுவது நல்லது. சகோதரரின் திருமணத் தடைகள் நீங்கி, சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.
கடகம்: காதல் உறவுகளில் இனிமை இருக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் அன்பான தருணங்களை செலவிடுவீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். இந்த வாரம், உங்கள் தேவைகளுக்காக அதிக பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். நீங்கள், பங்குச் சந்தையில் முதலீடு செய்ய நினைத்தால், இந்த நேரம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
வருமான வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் தேர்வுக்கு தயாராவார்கள். உடல் ஆரோக்கியம் படிப்படியாக மேம்படும். உங்கள் வழக்கமான கண்ணோட்டத்தில் சில மாற்றங்களைச் செய்தால் நன்றாக இருக்கும். வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள் இந்த வாரம் குடும்பத்தை விட்டு விலகி இருக்க நேரிடும். வீட்டிற்கு புதிய விருந்தினர் வருகையால், மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். இன்று ஒரு நல்ல நபரின் உதவியால் நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும்.
சிம்மம்:காதலிப்பவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல திருமண உறவு அமையும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். நீங்கள், சொத்தில் முதலீடு செய்யலாம். வேலை செய்பவர்கள் தாங்கள் வேலை செய்யும் இடத்தில் கொடுக்கப்பட்ட வேலைகளை சரியான நேரத்தில் முடிப்பார்கள்.
மேலதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் இனிமையைக் கடைபிடிப்பது நல்லது. மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய பாடத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆசையும் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் படிப்படியாக மேம்படும். மன அமைதிக்காக, ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் சிறிது நேரம் செலவிடுவீர்கள். கல்வியில் வெற்றி காண்பீர்கள். அரசியலில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்கு இது நல்ல நேரம்.
கன்னி:குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். அனைவரும் சேர்ந்து செயல்படுவதைக் காணலாம். குடும்பப் பொறுப்புகள் உங்கள் மீது விழும். உங்கள் வீட்டை சரிசெய்ய நிறைய பணம் செலவழிப்பீர்கள். புதிய தொழில் தொடங்க கடன் வாங்க நேரிடும். வியாபாரம் செய்பவர்கள் தொழிலை முன்னெடுத்து செல்ல கடினமாக உழைப்பதைக் காணலாம்.
மாணவர்கள் ஏதேனும் ஒரு பாடத்தை மாற்ற நினைத்தால், அதை அதிகம் தாமதப்படுத்த வேண்டாம். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். உயர்கல்விக்கு ஏற்ற காலம் இது. உடல் ஆரோக்கியம் படிப்படியாக மேம்படும். நீங்கள் ஒரு நல்ல மருத்துவரை அணுகுவது உங்களுக்கு நல்லது. கல்வியில் வெற்றி காண்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பூர்வீக சொத்தும் கிடைக்கும்.
துலாம்: குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் அன்பான தருணங்களைக் கழிப்பீர்கள். நீங்கள் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவீர்கள். குழந்தைகளுடன் சுற்றுலா செல்வீர்கள். அங்கு அவர்கள் மிகவும் உற்சாகமாக நேரத்தைக் களிப்பார்கள். குடும்பத்தில் இருந்து வந்த கருத்துவேறுபாடு நீங்கும். வீட்டுத் தேவைக்காக கொஞ்சம் பொருள்களை வாங்குவீர்கள்.
நிலம் அல்லது சொத்தில் முதலீடு செய்ய நல்ல நேரம். நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். நண்பர்களின் உதவியால் வருமானம் அதிகரிப்பதற்கான பல வாய்ப்புகள் கிடைக்கும். முன்பை விட ஆரோக்கியம் மேம்படும். கல்வியில் வெற்றி காண்பீர்கள். உங்கள் மன அமைதிக்காக நீங்கள் தனியாக சிறிது நேரம் செலவிடுவீர்கள். புதிய வேலை கிடைக்கும். அதன் மூலம் நீங்கள் லாபம் ஈட்டுவீர்கள் மற்றும் உங்கள் நிதி நிலைமையை வலுப்படுத்துவீர்கள்.
விருச்சிகம்: குடும்ப வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் கிடைக்கும். காதலிப்பவர்கள் தங்கள் உணர்வுகளை, தாங்கள் காதலிப்பவரிடம் சொல்லலாம். நிலம் வாங்க நினைத்தால் அது நல்ல முதலீடாக இருக்கும். பங்கு சந்தையில் முதலீடு செய்ய இந்த வாரம் சிறப்பானதாக இருக்காது. பணிபுரிபவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும். அதில், வருமானம் அதிகமாகவும் இருக்கும். ஆனால், பழைய வேலையில் இருப்பதே நல்லது.
மாணவர்கள் படிப்பிற்கு பதிலாக நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுவதால் படிப்பில் தடைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருக்காது. உங்கள் அன்றாட வழக்கத்தில் உடற்பயிற்சியையும், யோகாவையும் சேர்த்துக்கொள்வது நல்லது. வியாபாரம் செய்பவர்கள் தடைபட்டிருந்த வியாபார திட்டங்களை மீண்டும் தொடங்குவதில் வெற்றி காண்பார்கள்.
தனுசு:குடும்ப வாழ்க்கையில் அன்பு அதிகரிக்கும். குடும்பத்தினரின் ஆதரவும் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் சிறிது நேரம் செலவிடுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். புதிய வீடு வாங்கும் யோகம் உண்டாகும். அபாயகரமான முதலீடுகள் எதையும் செய்ய வேண்டாம். எந்த அவசர முடிவையும் எடுப்பது தீங்கு விளைவிக்கும்.
மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதில் சற்று தாமதம் ஏற்படும். இதனால் அவர்கள் தேர்வுக்கு, வீட்டிலிருந்து வெளியேறும் வரை படிப்பார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். சகோதர, சகோதரிகளின் உயர்கல்விக்காக தெரிந்தவர்களிடம் பேசுவீர்கள். திருமணமாகாதவர்கள் இடையே திருமண உறவுகள் பற்றி பேசலாம். உங்களுக்காக சிறிது நேரம் ஒதுக்குவீர்கள். அதில் உங்களுக்கு பிடித்த செயல்களை செய்வீர்கள்.
மகரம்:திருமணமானவர்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். வாழ்க்கைத் துணையுடன் காதல் செய்து பொழுதைக் கழிப்பீர்கள். திருமணமாகாதவர்களிடம் திருமண உறவுகள் பற்றி பேசலாம். உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். வருமானத்திற்கான வழிகள் அதிகரிக்கும். பண வரவுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.
வியாபாரத்தில் சில மாற்றங்களைச் செய்ய யோசிப்பீர்கள். மேலதிகாரியிடம் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். மாணவர்கள் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுவர். உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த, அன்றாட வழக்கத்தில் நடைபயிற்சி, யோகா மற்றும் தியானம் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்வீர்கள். வீட்டிற்கு ஒரு புதிய விருந்தினர் வருவதால் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். நீங்கள் ஒரு நல்ல நபரை சந்திப்பீர்கள்.
கும்பம்:காதல் உறவுகளில் இனிமை இருக்கும். திருமணமானவர்கள் தங்கள் இல்லற வாழ்க்கையில் மற்றொருவரின் தலையீட்டால் மனஉளைச்சலுக்கு ஆளாவார்கள். வீட்டை அலங்கரிக்க நிறைய பணம் செலவழிப்பீர்கள். புதிய வீடு வாங்க கடன் வாங்குவீர்கள். நிலம் மற்றும் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும். நீங்கள் செய்யும் வேலையை மாற்ற விரும்பினால், நல்ல நேரமிது.
மாணவர்கள் முழு கவனத்துடன் படிப்பார்கள். அப்போதுதான் அவர்கள் தேர்வில் வெற்றி பெறுவார்கள். உயர்கல்விக்கு ஏற்ற காலம். முன்பை விட ஆரோக்கியம் மேம்படும். யோகா பயிற்சியையும், தியானத்தையும் உங்கள் அன்றாட வழக்கத்தில் சேர்த்துக்கொள்வது உங்களுக்கு நல்லது. பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக பெற்றோர்கள் பணத்தை முதலீடு செய்வார்கள். நண்பர்கள் மூலம் வருமான வாய்ப்புகள் கிடைக்கும்.
மீனம்:குடும்ப வாழ்க்கை பற்றி பேசினால் மகிழ்ச்சியும், நிம்மதியும் உண்டாகும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் கிடைக்கும். உறவுகளில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். மூன்றாவது நபரின் தலையீடு, காதலிப்பவர்களிடையே சச்சரவுகளை ஏற்படுத்தும். வங்கியில் கடன் வாங்க நினைத்தால் அது எளிதாக கிடைக்கும். பங்கு சந்தையிலும், லாட்டரியிலும் முதலீடு செய்ய நல்ல நேரம் இது. வியாபாரம் செய்பவர்கள் கடினமாக உழைத்தால் மட்டுமே வெற்றி அடைவார்கள்.
செய்யும் வேலையில் மாற்றத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த வாரம் நல்லதல்ல. அரசு வேலைக்கு முயற்சிக்க சரியான நேரம் இதுவல்ல. எந்த மாற்றத்தையும் சிந்தித்து செய்யுங்கள். மாணவர்களுக்கு புதிய பாடத்தை தேர்வு செய்யும் வாய்ப்பு கிடைக்கும். போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுவார்கள். ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.