தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / spiritual

"சிங்கிளா இருந்த நீங்க ரிலேஷன்ஷிப்பில் விழும் நேரம் இது" - அந்த அதிர்ஷ்டக்கார ராசி யார்? - WEEKLY RASIPALAN IN TAMIL

நவம்பர் 03ஆம் தேதி முதல் 09ஆம் தேதி வரையிலான 12 ராசிகளுக்கான வார ராசிபலனைக் காணலாம்.

12 ராசிகளுக்கான வார ராசிபலன்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 3, 2024, 7:43 AM IST

மேஷம்: வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இது ஒரு சவாலான காலகட்டமாகவும் இருக்கலாம். வெளிநாடுகளில் தொழில் அல்லது தொழில் முயற்சியைத் தொடங்குபவர்கள் சில தடைகளை சந்திக்க நேரிடும். காதல் உறவுகளில், உணர்ச்சி வசப்பட்டு முடிவுகளை எடுப்பது சிக்கல்களுக்கு வழிவகுக்கும். மகிழ்ச்சியான இல்வாழ்க்கை அமைய உங்கள் வாழ்க்கைத் துணையின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பது முக்கியம்.

ரிஷபம்: நீங்கள் வியாபாரம் செய்பவர் எனில் உங்களின் தொழில்முறை முயற்சிகளில், செயல்களில் சில ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம். தேர்வுகள் மற்றும் போட்டிகளுக்குத் தயாராகும் மாணவர்கள் வெற்றிபெற குறிப்பிடத்தக்க முயற்சியில் ஈடுபட வேண்டும். காதல் உறவில் உள்ள மோதல்களை சுமுகமாக தீர்க்க முடியும்.

மிதுனம்: உங்கள் நீண்ட காலமாக கையை விட்டு சென்ற தாமதமான பணிகள் முடிவடையும். அதிகாரம் மற்றும் ஆட்சியில் செல்வாக்கு மிக்க நபர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். வீடு மற்றும் சொத்துக்கள் தொடர்பான மோதல்கள் தீர்க்கப்படும். போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள் நேர்மறையான விஷயங்களைப் பெறலாம். உங்கள் இல்வாழ்க்கை மகிழ்ச்சி நிரம்பியதாக இருக்கும்.

கடகம்: வாரத்தின் தொடக்கத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை நீங்கள் காணலாம். பதவி உயர்வு அல்லது நீங்கள் விரும்பும் இடத்திற்கு மாற்றலாகி செல்ல வேண்டும் என்ற உங்கள் கனவுகள் நனவாகும். நீங்கள் வெளிநாட்டில் ஒரு தொழில் அல்லது வணிகத்தை செய்ய வேண்டும் என எண்ணியிருந்தால் அது சாத்தியமாகும். உங்கள் காதல் உறவுகள் வலுவாக வளரும், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

சிம்மம்: நினைவில் கொள்ளுங்கள், ஒரு சிறிய பிழை உங்கள் நிலையை சேதப்படுத்தும். சொத்து மற்றும் நிலம் தொடர்பான சில முக்கியமான பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். காதல் உறவு மற்றும் நிறைவான இல்வாழ்க்கையை நடத்த உங்கள் துணையின் உணர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக செயல்படுங்கள்.

கன்னி: தொழில் வாழ்க்கையில் மாற்றத்தைக் கருத்தில் கொள்ளும் நபர்கள் வார இறுதிக்குள் ஒரு உயர்ந்த நிறுவனத்திடமிருந்து வேலை வாய்ப்பைப் பெறலாம். உங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று நீங்கள் கனவு கண்டால், உங்கள் ஆசை நிறைவேறக்கூடும். உங்கள் திருமண வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும், உங்கள் காதல் உறவுகள் பலப்படும்.

துலாம்: உடன்பிறப்புடனான கருத்து வேறுபாடுகளினால் நீங்கள் மன அழுத்தத்தை அனுபவிக்கலாம். நீங்கள் ஈட்டும் வருவாய் உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாமல் போகலாம். நீங்கள் உங்கள் மனதில் உள்ள நேசத்தை, நீங்கள் நேசிக்கும் ஒருவரிடம் சொல்ல வேண்டும் என எண்ணினால், அவ்வாறு செய்ய சரியான தருணத்திற்காக காத்திருப்பது நல்லது. மேலும் உங்கள் இல்வாழ்க்கை எப்போதும் போல் மகிழ்ச்சியாக இருக்கும்.

விருச்சிகம்: உங்கள் முந்தைய முயற்சிகள் மற்றும் உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். கூடுதலாக, உங்கள் தொழில் மற்றும் வணிகத்தைப் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளைப் பெறலாம். மாணவர்கள் தங்கள் படிப்பில் கவனம் செலுத்துவது சவாலாக இருக்கலாம். உங்கள் துணையுடன் ஆன்மீக பயணத்தை மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

தனுசு: உங்களுக்கு குறிப்பிடத்தக்க வெற்றியும், நிதி ஆதாயங்களும் கிடைக்கப்பெறுவீர்கள். பணிபுரியும் பெண்கள் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைவதைக் காணலாம், இது அவர்களின் நிலையை உயர்த்தும். நீங்கள் சிங்கிளாக இருந்தால், இந்த வாரம் திருமண வாழ்க்கையில் நீங்கள் அடி எடுத்து வைக்க வாய்ப்புள்ளது. உங்கள் பெற்றோர் உங்கள் காதல் உறவை அங்கீகரித்து திருமணத்திற்கு சம்மதம் வழங்க வாய்ப்புள்ளது.

மகரம்: இந்த வாரம் எதிர்பாராத பெரிய செலவுகள் இருக்கலாம். நீங்கள் வேலை தேடுபவராக இருந்தால், அதற்கான நேரம் கை கூட சிறிது காலம் ஆகலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உள்ள கருத்து வேறுபாடுகள் மோதல்களாக மாறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மனம் விட்டுப் பேசுவதன் மூலம் ஏதேனும் சிக்கல்கள் வீட்டில் ஏற்பட்டால் அதைத் தீர்ப்பது மிக முக்கியம்.

கும்பம்: சோம்பேறித்தனம் மற்றும் தற்பெருமை ஆகியவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும். ஏனெனில் இது உங்களுக்கு எதிர்மறையான விளைவுகளுக்கு வழிவகுக்கும். நிதி கொடுக்கல் வாங்கல்களில் விழிப்புடன் கவனமாக இருப்பது முக்கியம். எதிர்கால நிதி பின்னடைவுகளைத் தவிர்க்க துணிந்து ஏதாவது ஒரு வணிகத்திலோ அல்லது ஸ்மார்ட்டான முதலீடுகளைச் செய்வது முக்கியம். மகிழ்ச்சியான இல்வாழ்க்கையை நடத்த உங்கள் துணையின் தேவைகளை புறக்கணிக்காதீர்கள்.

மீனம்: சவால்களை எதிர் கொண்டு கடினமான முயற்சியை மேற்கொண்ட பின்னரே வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு கூடுதல் வருமானத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில்முனைவோருக்கு, விரும்பிய நிதி ஆதாயங்கள் கிடைக்கும். திருமணமான நபர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை எதிர்பார்க்கலாம், ஆனால் உங்கள் நல்வாழ்வுக்கும் உங்கள் உறவின் ஆரோக்கியத்திற்கும் முன்னுரிமை அளிப்பது முக்கியம்.

ABOUT THE AUTHOR

...view details