தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / spiritual

துலாம் ராசிக்காரருக்கு அடித்தது ஜாக்பாட்.. உங்க ராசிக்கு எப்படி? - WEEKLY RASIPALAN

டிசம்பர் 01 ஆம் தேதி முதல் 07ஆம் தேதி வரையிலான 12 ராசிகளுக்கான வார ராசிபலனைக் காணலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - Getty Image)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 1, 2024, 8:21 AM IST

மேஷம்: தொழில் வாழ்க்கை மற்றும் வணிக முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் எழும். ஆனால், அவை அனைத்தும் நீங்கள் விரும்பும் வகையில் இருப்பதற்கு வாய்ப்பில்லை. உள்ளுணர்வைக் கவனிப்பது மற்றும் தேவையற்ற அபாயங்களைத் தவிர்ப்பது முக்கியம். ஆரோக்கியமான உணவு மற்றும் தினசரி உடற்பயிற்சிகளை செய்து, ஆரோக்கியத்தை பராமரிப்பதில் கவனம் செலுத்துவது அவசியம். சுதந்திரமாக இருக்க ஏங்குவீர்கள். நண்பர்களிடமிருந்து ஆலோசனை பெற்று முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள்.

ரிஷபம்:தொழில் வாழ்க்கை மற்றும் வியாபாரத்தில் சாதனை படைப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் வழிகாட்டுதலும், வாழ்த்துக்களும் பக்கபலமாகவும், சாதகமாகவும் இருக்கும். காதல் உறவுகள் மிகவும் அருமையான தருணமாக மாறும் காலகட்டம். காதல் துணையுடன் சுவாரஸ்யமான தருணங்களை செலவழிப்பதற்கான வாய்ப்புகல் ஏற்படும். குடும்ப உறவுகள் வலுவாக இருக்கும். குடும்பம் மற்றும் சமூகத்திற்கான திட்டமிடலில் கவனம் செலுத்தக்கூடும். தனிப்பட்ட வளர்ச்சி, செல்வம் மற்றும் சாதனை நிறைந்ததாக இருக்கும்.

மிதுனம்:பணிச்சுமை மற்றும் அதிகப்படியான கடமைகள் உங்களை சோர்வில் ஆழ்த்தக்கூடும். கூடுதலாக, மன அழுத்தம் அதிகரிக்கக்கூடும். இருப்பினும், நம்பிக்கையை இழக்காமல் இருப்பது முக்கியம். வியாபாரத்தில் ஒரு நிலையான வெற்றியை பெறுவீர்கள். தேவையற்ற சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவதற்குப் பதிலாக, தொழில்முறை கடமைகளுக்கு முன்னுரிமை அளித்து, திட்டங்களை செயல்படுத்துவதில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

காதல் உறவுகளில் சிறிய வேறுபாடுகள் இருக்கலாம். காதல் இணைப்பை மேம்படுத்த நண்பர்கள் அல்லது உங்கள் நலம் விரும்பிகளிடம் ஆலோசனை பெறுவீர்கள். உங்கள் துணையுடன் புனித தலத்திற்கு நீங்கள் பயணிக்க வாய்ப்புள்ளது. வீட்டில் உள்ள வயதான குடும்ப உறுப்பினரின் நல்வாழ்வைப் பற்றிய கவலை கொள்வீர்கள்.

கடகம்:உங்கள் என்னக்களையும், அபிலாஷைகளையும் அடைய சரியான வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சாதகமான முடிவுகள் நடக்கும். குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு அதிக கவனம் செலுத்துவது முக்கியம். சர்வதேச கூட்டாளர்கள் மற்றும் வணிக நடவடிக்கைகளுடனான உங்கள் தொடர்புகளில் வெற்றியை காணலாம்.

உடல்நலம் ஆரோக்கியமாக இருக்க வாய்ப்புள்ளது, ஆனால் தவறாமல் உடற்பயிற்சி செய்வதன் மூலமும், சத்தான உணவுப் பழக்கத்தை கடைப்பிடிப்பதன் மூலமும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிக்க முடியும். பணிபுரியும் பெண்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையை சமநிலைப்படுத்துவதில் சில சவால்களை சந்திக்க நேரிடும்.

சிம்மம்: சிறிய பிரச்சனைகளில் மனம் தளராமல் கவனமாக இருக்க வேண்டும். தொழில்முறை வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புள்ளது. உங்கள் சகாக்கள் மற்றும் மேலதிகாரிகளிடமிருந்து அசைக்க முடியாத ஆதரவைப் பெறுவீர்கள். காதல் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். மேலும் உங்கள் மனம் கவர்ந்த முக்கியமான நபருடன் இன்பமான தருணங்களை அனுபவிப்பீர்கள். திருமண வாழ்க்கையும் உங்களுக்கு மனநிறைவை தரும். உங்கள் குடும்பத்தின் கவலைகளிலும், பிரச்சனைகளிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

கன்னி: தடைகள் மற்றும் ஆபத்துகள் நம்மை நோக்கி வரும்போது கோபம் மற்றும் கசப்பு உணர்வு தோன்றுவது இயல்பு. எனவே, அமைதியாக இருப்பது முக்கியம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாமல் புறக்கணிப்பது சிக்கல்களுக்கு வழிவகுக்கும். எனவே, உங்கள் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிப்பது மிக முக்கியம். நிதி சிக்கல்களையும் தடுக்க புத்திசாலித்தனமான பண நிர்வாகத்தில் கவனம் செலுத்துவது புத்திசாலித்தனம்.

மற்றவர்களால் ஏமாற்றப்படாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்த ஒரு முடிவெடுத்தாலும் யோசித்து கவனமாக எடுக்க வேண்டும். காதல் துணை அல்லது மனைவியுடன் வலுவான அன்பின் பிணைப்பை நீங்கள் உணரக்கூடும். தாயின் உடல்நலம் குறித்து கவலைகள் ஏற்படும். பருவகால மாற்றங்களுடன் தொடர்புடைய நோய்களைத் தடுக்க விழிப்புடன் இருக்க வேண்டும்.

துலாம்:முக்கிய நபரின் உதவியுடன் நிலுவையில் உள்ள உங்கள் பணிகளை விரைவாக முடிப்பீர்கள். இது உங்கள் மன நலனுக்கு மிகவும் நன்மையளிக்கும். தொழில் வாழ்க்கை மற்றும் வணிகத்தில் புதிய வாய்ப்புகளை ஆராய்வது சுவாரஸ்யமாக இருக்கும். நிலம் மற்றும் சொத்து ஆகியவற்றின் பரிவர்த்தனைகளிலிருந்து சிறப்பான லாபங்கள் கிடைக்கலாம்.

உடல்நலம் நிலையானதாக இருக்கலாம், ஆனால் தியானம் மற்றும் யோகா பயிற்சி செய்வது உங்கள் உடல் மற்றும் மன நலனை மேம்படுத்தும். காதல் உறவில் இருப்பவர்களுக்கு திருமணத்திற்கான நேரம் கைக்கூடி வரும். குடும்பத்தினர் உங்களின் காதலுக்கு பச்சை கொடி காட்டுவார்கள். உங்களை ஆதரிப்பார்கள். குழந்தைகள் தொடர்பான பிரச்சினைகளிலும் நீங்கள் ஆதரவைப் பெறுவீர்கள்.

விருச்சிகம்: உடல்நலப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதும், மருத்துவ நிலைமைகளுக்கு சரியான நேரத்தில் சிகிச்சையை உறுதி செய்வதும் முக்கியம். உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சி நடைமுறைகளை சரிசெய்வது மிகவும் முக்கியம். காதல் மீதான உங்கள் ஆர்வம் இந்த வாரம் சற்று தீவிரமடையக்கூடும். உங்கள் காதல் துணையுடன் உங்கள் அன்பை தெரிவிப்படுத்துவது அல்லது உங்கள் ரிலேஷன்ஷிப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது குறித்து பரிசீலிக்க வழிவகுக்கும்.

மனம் கவர்ந்த பரிசுடன் உங்கள் அன்புத் துணையை ஆச்சரியப்படுத்தி அவர்களின் இதயத்தை வெல்ல நீங்கள் முயற்சிக்கலாம். உங்கள் இலக்குகளை அடைய புத்திசாலித்தனமான நிதி முடிவுகளை எடுப்பது முக்கியம். உங்கள் பணத்தை பயனுள்ள பங்குகளில் முதலீடு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கும். ஆனால், அதிக ஆபத்துள்ள முதலீடுகளை தவிர்ப்பது அவசியம்.

தனுசு: உங்களுடன் உத்யோகத்தில் உள்ளவர்கள் உங்கள் வேலையில் மகிழ்ச்சியடைவார்கள். தொழில் முறை மற்றும் தொழில் முனைவதற்கான முயற்சிகளில் முன்னேற்றம் மற்றும் வெற்றிக்கான வாய்ப்புகள் உள்ளன. வியாபாரத்தில் சில பின்னடைவுகளை சந்திக்க நேரிடும். தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையும் சிறப்பாக மாற வாய்ப்புள்ளது. காதல் துணையுடனான உங்கள் அன்பு நெருக்கமாகும். நண்பர் அல்லது குடும்ப உறுப்பினரின் ஆதரவுடன் வருமானத்திற்கான புதிய வழிகளை நீங்கள் கண்டறியலாம்.

மகரம்: சரியான தகவல் தொடர்பு மற்றும் பணியின் பொறுப்புகளுடன் ஒத்துப்போகும் வகையில் சிறப்பாக செயல்படுவதன் மூலம் முதலாளியுடன் நல்ல உறவு ஏற்படும். உங்கள் நல்வாழ்வைப் பாதுகாக்க, நிலையான உடற்பயிற்சியை தொடர்ந்து செய்வது மற்றும் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் உணவுப் பழக்கத்தை பின்பற்றுவதும், பராமரிப்பதும் அவசியம். மற்றவர்களின் உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டு ஆறுதலாகவும், புரிதலைக் காண்பிப்பதும் முக்கியம்.

காதல் உறவுகளில் அவர்களின் எண்ணம் அறிந்து அணுகுங்கள். காதல் துணைக்காக போதிய நேரத்தை ஒதுக்குங்கள். வேலை மற்றும் சமூக வாழ்க்கையை சமநிலைப்படுத்துவதில் அதிக ஈடுபாடு காட்டாமல் கவனமாக இருக்க வேண்டும். வரவு செலவுகளை உன்னிப்பாகத் திட்டமிடுங்கள். செலவுகளை புத்திசாலித்தனமாக நிர்வகிக்க முயற்சி செய்யுங்கள்.

கும்பம்: காதல் உறவில் உற்சாகமும், மகிழ்ச்சியும் ஏற்படும். குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவுகளின் அன்பும், ஆதரவும் உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தரக்கூடும். நீங்கள் ஈடுபடும் தொழில்முறை மற்றும் வணிக முயற்சிகள் வெற்றிகரமாக இருக்க வாய்ப்புள்ளது. ஆன்மீக விஷயங்களைப் பற்றி ஆழமாக சிந்திப்பதற்கும், புனித தலங்களுக்கு பயணம் மேற்கொள்வதைப் பற்றி ஆலோசிப்பதற்கும், ஆராய்வதற்கும் சிறந்த நேரம்.

சில ஆடம்பர பொருட்களை வாங்க விரும்பலாம், ஆனால் உங்கள் செலவுகளை புத்திசாலித்தனமாக நிர்வகிப்பது முக்கியம். உங்கள் நேர்மறையான கண்ணோட்டம் மற்றும் சமுதாயத்தின் மீது நீங்கள் காட்டும் நம்பிக்கையான அணுகுமுறையும், ஈடுபாடும் உங்களுக்கு இன்னும் அதிக மனநிறைவையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தக்கூடும். புதிய சுவாரஸ்யமான அனுபவங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்.

மீனம்:நிதிநிலைமைகளில் ஏற்படும் சிக்கல்களினால் சில விரக்தியை அனுபவிக்கலாம். தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றங்களைக் காண வாய்ப்புள்ளது. காதல் உறவுகள் மிகவும் ஆழமானதாகும். உங்கள்மனம் கவர்ந்தவருடன்அற்புதமான தருணக்களை செலவிடுவதற்கான வாய்ப்பு ஏற்படும். குடும்பத்தினரிடம் நீங்கள் அன்பையும், பரிவையும் காட்டுவீர்கள். அவர்களின் கோபத்தைத் தணிக்க உங்கள் வாழ்க்கைத்துணை உங்களுக்கு பக்கபலமாக இருந்து உங்களுக்கு ஆதரவளிப்பார்.

உங்கள் உடல்நலம் சீராக இருக்க வேண்டும். தொடர்புகள் மற்றும் இணைப்புகள் மூலம் அரசாங்க திட்டங்களிலிருந்து நீங்கள் நன்மைகளைப் பெறலாம். எதிர்காலத்தை திட்டமிடுவதற்கும், உங்கள் நோக்கங்களை அடைவதற்கும் சிறந்த காலம். தொழில்முறை நோக்கங்கள் மற்றும் குடும்பக் கடமைகள் இரண்டையும் சரிவர நிர்வாகிப்பதில் கவனம் செலுத்துவது முக்கியம்.

ABOUT THE AUTHOR

...view details