சென்னை: காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலுக்கு தங்க முலாம் பூசப்பட்ட வீணையை சென்னை தம்பதி தானமாக வழங்கினர்.
சென்னையைச் சேர்ந்த நீரஜ் - விஜயகுமார் தம்பதி காஞ்சி காமாட்சி அம்மனுக்கு தங்கமுலாம் பூசப்பட்ட சுமார் 10 கிலோ எடை கொண்ட வெள்ளி வீணையை தானாக வழங்கி உள்ளனர். சென்னையை சேர்ந்த இந்த தம்பதி, அண்மையில் இந்த வீணையை காஞ்சிபுரம் கொண்டு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் காஞ்சிபுரம் சங்கர மடத்தில் உள்ள ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜேயந்திரரிடம் வீணையை அளித்து ஆசி பெற்றனர். பின்னர் சங்கர மடத்தில் உள்ள பிருந்தாவனத்தில் முக்தியடைந்த ஸ்ரீ மகா பெரியவா ஜெயந்திரரிடமும் ஆசி பெற்றனர். பின்னர் காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் பிரகாரத்தில் வீணையுடன் வலம் வந்த தம்பதி, அதனை காமாட்சி அம்மன் ஆலயத்தின் அலுவலகத்தில் உள்ள சுந்தரேச ஐயர் முன்னிலையில் அதனை தானமாக அளித்தனர்.
மேலும் சென்னையைச் சேர்ந்த நீரஜ் - விஜயகுமார் தம்பதி காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு பிரமாண்டமான ரோஜா, தாமரை மாலைகளையும் சமர்பித்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி குடையையும் இதே தம்பதி காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலுக்கு வழங்கியது.