தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / spiritual

வார ராசிபலன்: காதலை வெளிப்படுத்த நல்ல தருணம்.. அதிர்ஷ்டக்காற்று எந்த ராசிக்கு வீசுகிறது? - Weekly Rasipalan in Tamil - WEEKLY RASIPALAN IN TAMIL

Weekly Rasipalan in Tamil: மார்ச் 24ஆம் தேதி முதல் மார்ச் 30ஆம் தேதி வரையிலான 12 ராசிகளின் வார ராசி பலன்களைக் காணலாம்.

Weekly Rasipalan
வார ராசிபலன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 24, 2024, 7:07 AM IST

மேஷம்: இந்த வாரம் மிகவும் பிஸியாக இருப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வேலைக்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால், உங்கள் பழைய வேலையில் தொடர்ந்து பணியாற்றுவது தான் நல்லது. நீங்கள் செய்யும் கூட்டாண்மைத் தொழிலில் லாபம் கிடைக்கும். மாணவர்கள் நன்குகவனமாகப் படிப்பார்கள். காதல் ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்களுக்கு இது மிகவும் சாதகமான நேரம். இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் எங்காவது சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.

குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆனால் உங்களின் சில கெட்ட பழக்க வழக்கங்களால், உடல் நிலையில் பிரச்னைகள் ஏற்படலாம். முன்பே செய்திருந்த, செய்த முதலீட்டின் முழு பலனையும் பெறுவீர்கள். உங்கள் வருமானம் சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலை ஸ்திரமாக இருக்கும். செலவுகளை கட்டுப்படுத்துவதில் வெற்றி பெறுவீர்கள். எந்தவொரு புதிய முதலீட்டையும் செய்வதற்கு முன், நிபுணரின் ஆலோசனையைப் பெறுங்கள். தாயார் உங்களுடன் இருப்பார்.

ரிஷபம்:மாணவர்களுக்கு இந்த வாரம் சுவாரஸ்யமான ஒன்றாக இருக்கும். உங்கள் நண்பர்களில் சிலர், உங்கள் கவனத்தை திசை திருப்ப முயற்சிப்பார்கள். மாணவர்களின் உயர் கல்விக்கு உகந்த நேரம். வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். காதலர்கள் தங்கள் உணர்வுகளை, அவர்களின் காதல் துணையிடம் கூறுவார்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு, வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மூத்த சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதனால், முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அமையும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து ஒரு விருந்தில் கலந்து கொள்வீர்கள். அங்கு ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசி மகிழ்வீர்கள். வீட்டை விட்டு வெளியே தனியாக வேலை செய்பவர்கள், தங்கள் குடும்பத்தை பிரிந்து வாழும் நிலை ஏற்படலாம். தூரத்து உறவினர் மூலம் நல்ல செய்தி வந்து சேரும். நண்பருக்கு பண உதவி செய்வீர்கள். இந்த வாரம் உங்களுக்கு சில அரிய வாய்ப்புகள் கிடைக்கும். இது உங்களுக்கு பொருளாதார ரீதியாக பயனளிக்கும்.

மிதுனம்: திருமணமானவர்கள் இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். உங்களின் தொழில் முன்னேற்றத்திற்காக ஒரு புதிய திட்டத்தை தீட்டுவீர்கள். காதல் ரிலேஷன் ஷிப் மிகவும் இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு ஒரு புதிய நல்ல உறவு வந்து சேரும். வீட்டில் மங்களகரமான சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். உங்கள் சுக துக்கங்களை, நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வீர்கள். மாலையில் உங்கள் வீடு, விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கும்.

உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு அருமையான டீல்கள் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்கள், தங்களுடைய வியாபரத்தை மேலும் மேம்படுத்துவதற்காக சில பயணங்களை மேற்கொள்ளுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு, அவர்களின் உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் காணப்படுகிறது. ஆரோக்கியம் படிப்படியாக மேம்படும். மாணவர்களின் உயர் கல்விக்கு உகந்த நேரம். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவார்கள். அரசுத் துறைகளிலிருந்து, உங்களுக்கு சில பண வெகுமதிகள் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

கடகம்:இந்த வாரம் காதல் துணையுடன் எங்காவது ஓர் இடத்துக்கு சுற்றுலா செல்லும் வாய்ப்பு உள்ளது. அங்கு நீங்கள் இருவரும் உங்கள் மனதில் உள்ளதை ஒருவருக்கொருவர் பேசி பகிர்ந்து கொள்வீர்கள். வாழ்க்கைத் துணையின் ஆதரவு முழுவதுமாக கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக வேலை செய்வதைக் காணலாம். நீங்கள் குடும்பத்தினருடன் இனிமையான பொழுதுகளைக் கழிப்பீர்கள் மற்றும் பணத்தை எவ்வாறு சேமிப்பது என்பதைக் கற்றுக்கொள்வீர்கள். உங்கள் பிஸியான நாளிலிருந்து உங்கள் குழந்தைகளுடன் சிறிது நேரம் செலவிடுவீர்கள்.

அரசியலில் வெற்றி பெறுவீர்கள். தலைவர்களை சந்திக்கும் வாய்ப்புகள் வரும். போட்டிக்கு தயாரகின்ற மாணவர்கள் மிகக் கடுமையாக உழைபார்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும். நீங்களே சில ஷாப்பிங் செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள், அவர்களின் வேலையில் சில பிரச்னைகளை சந்திக்க நேரிடும். இருந்தாலும், தன்னம்பிக்கையை இழக்கமாட்டீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பொருளாதார நிலைமை மேலும் ஸ்திரமாகும்.

சிம்மம்: இந்த வாரம் சற்று சராசரியான வாரமே. ஆனால் உங்கள் செயல்களால் அதை நீங்களே சிறப்பாக மாற்றிக் கொள்ளலாம். அதிகம் யோசிக்காமல் கடினமாக உழைக்கவும். குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். திருமணமானவர்களின் இல்லற வாழ்க்கையில் சில சச்சரவுகள் ஏற்படலாம். உங்கள் வாழ்க்கைத் துணையின் உடல்நிலை மோசமடையக்கூடும் மற்றும் அவர்களுடனான உங்கள் உறவில் சற்று பதற்றமும் ஏற்படக்கூடும்.

காதலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு இந்த வாரம் ஒரு வரப்பிரசாதம். உங்கள் காதல் அடுத்த கட்டத்திற்கு முன்னேறும். நீங்கள் இருவரும் ஒருவர் மீது மற்றொருவர் மிகுந்த காதலுடன் இருப்பீர்கள். இருவரும் சேர்ந்து எங்கேயாவது சுற்றுலாப் போகலாம். உங்கள் காதல் துணையின் மீது நம்பிக்கை வைப்பீர்கள் மற்றும் உங்கள் உறவு அழகாக முன்னேறும்.

கன்னி: இந்த வாரம் மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். ஆசிரியர்கள் அவர்கள் துறையில் சிறப்பாக பணி ஆற்றுவார்கள். நண்பர்கள் மூலம் வருமான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோக மாற்றமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் வியாபாரம் செய்பவர் எனில், உங்கள் வியாபாரத்தை மேலும் மேம்படுத்துவதற்காக, நிறைய முயற்சிகளை எடுப்பீர்கள், அதில் வெற்றியையும் காண்பீர்கள்.

நிதி நிலைமை நன்றாக இருக்கும். ஆனால் செலவுகள் அப்படியேதான் இருக்கும். நண்பர்கள் இன்று நீண்ட நேரம் உங்களுடன் தொலைபேசியில் பேசுவார்கள். சகோதர, சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். மன அமைதிக்காக, சிறிது நேரத்தை மத நிகழ்ச்சிகளில் செலவிடுவீர்கள். அரசியலில் வெற்றி பெறுவீர்கள். தலைவர்களை சந்திக்கும் வாய்ப்புகள் வரும். ஆரோக்கியம் முன்பை விட மேம்படும். காலை நடைப்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை தினசரி வாழ்வில் சேர்த்துக் கொண்டால் நல்லது.

துலாம்: இந்த வாரம் மிகவும் ஸ்பெஷலாக இருக்கும். உங்கள் தொழிலை மேம்படுத்துவதற்காக கடுமையாக முயற்சித்தீர்கள். அதற்கான வெற்றி வரும் தருணம் இது. ஆசிரியர்கள் அவர்கள் துறையில் சிறப்பாக பணி ஆற்றுவார்கள். குடும்பத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிலவும். நீங்கள் உங்கள் மனைவியுடன் ஒரு ரொமாண்டிக் டின்னருக்குச் செல்வீர்கள். காதல் ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்களுக்கு, இந்த வாரம் விசேஷமாக இருக்காது. மாணவர்கள் மிக கவனத்துடன் படிப்பார்கள். உங்களுக்கு விருப்பமில்லை என்றாலும் கூட திடீரென்று சில செலவுகளைச் செய்ய வேண்டி இருக்கும்.

மேலும், அதை செய்து தீர வேண்டிய கட்டாயத்தில் இருப்பீர்கள். புதிய வாகனத்தை வாங்கும் யோகம் உள்ளது. உங்களுக்கு பாக்கி வரவேண்டிய பணம் இன்று கிடைக்கும். இதன் மூலம் உங்கள் நிலுவையில் உள்ள பணிகளை செய்து முடிப்பீர்கள். நீங்கள் யாரிடமாவது கடன் வாங்கியிருந்தால், அதையும் திருப்பித் தருவீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். மன அமைதிக்காக, மத நிகழ்ச்சிகளிலும் நேரத்தை செலவிடுவீர்கள். பெரியோர்களின் பாதத்தை வணங்கி ஆசீர்வாதம் பெறுங்கள்.

விருச்சிகம்: மாணவர்களுக்கு இந்த வாரம் மிகச் சிறப்பாக இருக்கும். உங்களின் கடின உழைப்புக்கான வெற்றி வாரம் இது. வெளிநாட்டிற்கு சென்று கல்வி கற்கும் வாய்ப்பு அமையும். காதல் ரிலேஷன்ஷிப்பில் இருந்த பதற்றங்கள் முடிவுக்கு வரும். திருமணமானவர்களின் இல்லறத்தில், நல்லிணக்கம் ஏற்படும். குடும்ப நலனுக்காக வாழ்க்கைத் துணையுடன் இணைந்து செயல்படுவீர்கள். குடும்ப பொறுப்புகள் உங்கள் மீது அதிகம் சுமத்தப்பட்டாலும், அவற்றை நீங்கள் பொறுப்பாக கையாண்டு சரியாக நிறைவேற்றுவீர்கள்.

உங்கள் உடன்பிறந்தோரின் உயர்கல்விக்காக, உங்களுக்கு தெரிந்தவர்களுடன் பேசுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு, முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் வியாபாரம் செய்பவர் எனில், வியாபரத்தை மேலும் மேம்படுத்துவதற்காக சில பயணங்களை மேற்கொள்வீர்கள். இது உங்களுக்கு நன்மை பயக்கும். வீட்டில் பூஜை மற்றும் பஜனை போன்ற சுபநிகழ்சிகள் ஏற்பாடு செய்யப்படும். வீட்டிற்கு விருந்தினர்கள் வருவார்கள். வீட்டை விட்டு வெளியே தனியாக வேலை செய்பவர்கள், தங்கள் குடும்பத்தை பிரிந்து வாழும் நிலை ஏற்படலாம்.

தனுசு:இந்த வாரம் திருமணமானவர்கள் தங்கள் இல்வாழ்க்கையை மேலும் சிறப்பாக மாற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவர்கள். உங்கள் மனைவியுடன் ஒரு ரொமாண்டிக் டின்னருக்கு செல்வீர்கள். அங்கு இருவரும் அன்பாக உரையாடுவீர்கள். காதல் ரிலேஷன்ஷிப்பில் சற்று தொய்வு ஏற்படும். அரசு திட்டங்களினால் நன்மை கிடைக்கும். பொருளாதார நிலைமை மேலும் வலுவடையும். பூர்வீக சொத்துக்களில் இருந்து லாபங்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. புதிய வாகனத்தை வாங்கும் யோகம் உள்ளது. பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஆதாலால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

மாணவர்கள் முழு கவனத்துடன் படிப்பார்கள். மாணவர்களின் உயர் கல்விக்கு உகந்த நேரம். ஆரோக்கியம் படிப்படியாக மேம்படும். வியாபாரம் செய்பவர் எனில், உங்கள் வியாபாரத்தை மேலும் மேம்படுத்துவதற்காக நிறைய முயற்சிகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள், தங்களுடைய பழைய வேலையிலேயே தொடர்ந்து இருப்பது நல்லது. இங்கு மட்டுமே நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகளை ஷாப்பிங் மால்களுக்கும், பிக்னிக்குகளுக்கும் அழைத்துச் செல்வீர்கள்.

மகரம்:நிதி நிலை இந்த வாரம் நன்றாக இருக்கும். அனைவருக்கும் உதவி செய்ய முன்வருவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். இதில் வருமானம் அதிகமாக இருக்கும். வியாபாரம் செய்பவர்கள் முடங்கிக் கிடக்கும் தங்கள் வணிகத் திட்டங்களை மீண்டும் தொடங்குவார்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். உங்கள் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் சேர்ந்து, சில புதிய வேலைகளைத் தொடங்கலாம். இது உங்கள் வருமானத்தை அதிகரிக்கும்.

ஆசிரியர்கள் அவர்கள் துறையில் சிறப்பாக பணி ஆற்றுவார்கள். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். மாணவர்களின் உயர் கல்விக்கு உகந்த நேரம். ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். சமுதாய முன்னேற்றத்திற்காக பாடுபடுபவர்களுக்கு மரியாதை கிடைக்கும். உங்கள் வீட்டை பழுது பார்ப்பதற்காக பணம் செலவழிக்க நேரிடலாம். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு காணப்படுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

கும்பம்: காதல் உறவுகளுக்கு இந்த வாரம் கலவையாக இருக்கும். உங்கள் காதலருக்கு நேரம் ஒதுக்குவதால், நீங்கள் பதற்றத்தை காண்பீர்கள். திருமணமானவர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையில் பதற்றத்தை உணருவார்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும். மூதாதையர் சொத்துக்களிலிருந்து பணப் பலன்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வாழ்க்கைத் துணையை புதிய வேலைகளைத் தொடங்க வைக்கலாம். இது வருமானத்தை அதிகரிக்கும். கல்வியில் வெற்றி பெறுவீர்கள்.

உயர்கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கு, அவர்கள் விரும்பும் பாடத்தைப் படிக்க வாய்ப்பு கிடைக்கும். வீட்டில் வழிபாடு நடைபெறும். வியாபாரம் செய்பவர்கள் வியாபாரத்தை முன்னெடுத்துச் செல்ல சிலரை ஈடுபடுத்துவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கொடுக்கப்பட்ட பணிகளை முடிப்பார்கள். உயர் அதிகாரிகளால் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் அமையும். ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். உங்கள் எண்ணங்களை, பெற்றோருடன் பகிர்ந்து கொள்வீர்கள்.

மீனம்: உங்கள் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் சில புனித ஸ்தலங்களுக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும். அங்கு அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வாழ்க்கைத் துணையிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். காதல் உறவுகளில் இனிமை இருக்கும். மாணவர்கள் முழு கவனத்துடன் படிப்பதைக் காணலாம். உயர்கல்விக்கு நேரம் நன்றாக உள்ளது. பொருளாதார நிலைமை மேலும் வலுவடையும். பணிபுரியும் மாணவர்களுக்கு உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

வியாபாரம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தத்தை இறுதி செய்வார்கள். நீங்கள் மூத்த உறுப்பினர்களின் பாதங்களைத் தொட்டு அவர்களின் ஆசீர்வாதங்களைப் பெற்றால், உங்கள் அனைத்து வேலைகளும் முடிவடையும். அண்ணன் திருமணத்தில் வந்த தடைகள் நீங்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். எல்லோரும் வருவதும், போவதுமாக இருப்பார்கள். வியாபாரம் தொடர்பான பயணங்களையும் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. மகிழ்ச்சியும் அதிகரிக்கும். ஆரோக்கியம் முன்பை விட சிறப்பாக இருக்கும்.

ABOUT THE AUTHOR

...view details