தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / spiritual

காதல் உறவு வலுப்பெறும் வாரம்... யார் யாருக்கு தெரியுமா? - Weekly Horoscope - WEEKLY HOROSCOPE

Weekly Horoscope: ஆகஸ்ட் 11ஆம் தேதியான இன்று முதல் 17ஆம் தேதி வரை 12 ராசிகளுக்கான வார ராசிபலன்களைக் காணலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 11, 2024, 6:37 AM IST

மேஷம்:கலவையான வாரமாக இருக்கும். ஒரு குடும்ப உறுப்பினருடன் ஏதாவது ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஒரு கூட்டாண்மையில் வணிகம் செய்தால், இந்த காலகட்டத்தில், நிதி இழப்புகளை சந்திக்க நேரிடும் என்பதால், அவர்களை முழுமையாக நம்புவதைத் தவிர்க்க வேண்டும். காதல் விவகாரங்களைப் பொறுத்தவரை, மிகவும் மங்களகரமானதாகவோ அல்லது வெற்றிகரமானதாகவோ இருக்காது. உங்கள் காதல் துணையை சந்திப்பதில் சிரமங்களை சந்திக்க நேரிடும். இதனால் மனம் அமைதியற்றதாக இருக்கும். திருமணத்தில் வாழ்கைத் துணையின் உணர்ச்சிகளை புறக்கணிப்பதைத் தவிர்க்கவும். இருப்பினும், இந்த கடினமான நேரங்கள் நீண்ட காலம் தொடராது. வார இறுதிக்குள், உங்களுடைய புத்திசாலித்தனத்தாலும் மற்றும் ஆத்மார்த்த நண்பர்களின் உதவியுடன் வாழ்க்கையின் அனைத்து பிரச்சினைகளையும் வெற்றிகரமாக சமாளித்து அதற்கான தீர்வுகளையும் கண்டுகொண்டு இருப்பீர்கள், உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

ரிஷபம்: இந்த வாரம் நல்ல பலனைத் தரும். தொடக்கத்தில், உத்தியோகத்தில் இருப்பவர்களின் சீனியர்கள் மற்றும் ஜூனியர்கள் ஆகிய இருவரிடமிருந்தும் ஆதரவைப் பெறுவீர்கள். குடும்ப அங்கத்தினர் ஒருவரின் மிகச் சிறந்த சாதனையின் விளைவாக மதிப்பும் மரியாதையும் மேம்படும். மத சம்பந்தமான விழாக்கள் நடைபெறலாம். மேலும் எந்தவொரு திட்டம் அல்லது நிறுவனத்திலும் முன்பு செய்திருந்த முந்தைய முதலீடுகளின் பலன்கள் இந்த வாரம் கிடைக்கலாம். குடும்பம் தொடர்பான முடிவுகளை வாரத்தின் பிற்பகுதியில் எடுக்கலாம். சமூகத்தில் மரியாதை உயரும். காதல் உறவுகள் சக்திவாய்ந்ததாகவும், தீவிரமாகவும் இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். பரீட்சைகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு சில நல்ல செய்திகள் வரக்கூடும். வார இறுதிக்குள் நிலம் வாங்கி, விற்கும் ஆசை நிறைவேறும். பூர்வீக சொத்து கையில் வர வாய்ப்பு ஏற்படும். பெற்றோர் உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வார்கள்.

மிதுனம்: இந்த வாரம் முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் மிகவும் சாதகமானதாக இருக்கும். ஏனென்றால் வாரத்தின் தொடக்கத்தில் அலுவலகப் பணிகளின் கூடுதல் சுமை ஏற்படலாம். பயணத்தின் போது, உடல்நலம் மற்றும் பொருட்களை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். செல்வாக்கு மிக்க நபரின் உதவியுடன் வார இறுதிக்குள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலையை சுலபமாக முடிக்க முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். காதல் உறவில் தீவிரம் இருக்கும். உங்கள் காதல் துணையிடம் ஈர்ப்பு வளரும். மேலும் நீங்கள் அவருடன் அல்லது அவளுடன் அதிக நேரம் செலவிட விரும்புவீர்கள். திருமண வாழ்க்கையில் இனிமை இருக்கும். உடல்நலம் மற்றும் உடமைகளை சிறப்பாக கவனித்துக் கொள்ளுங்கள். இந்த நேரத்தில், நெருங்கிய நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் ஏதாவது ஒரு சுற்றுலா தலத்திற்கு பயணிக்கும் வாய்ப்பும் கிடைக்கும். தொண்டுசெய்வதிலும், மதம் மற்றும் வேறு பல விஷயங்களிலும் ஆர்வமாக இருப்பீர்கள்.

கடகம்:இந்த நேரத்தில், மற்றவர்களுடன் பணிபுரிவது நன்மை பயக்கும். மேலும் திட்டமிட்ட வேலைகள் சரியாக திட்டமிட்ட காலத்திற்கும் செய்யப்பட வேண்டும். லாபம் ஈட்டுவது மட்டுமல்லாமல், வியாபாரம் முன்னேற்றம் அடைவதையும் காண்பீர்கள். காதல் விவகாரங்களைப் பொறுத்தவரையில் இந்த வாரம் சிறப்பான ஒன்று சொல்ல முடியாது. ஏனெனில் சில விஷயங்களில் காதல் துணையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, பதற்றத்திற்கு முக்கிய காரணமாக இருக்கும். கருத்து வேறுபாடுகளைத் தீர்க்கும் போது மிகவும் கணிவாகவும், அன்பாகவும் இருங்கள். இல்லையெனில், நன்கு திட்டமிடப்பட்ட விஷயம் கூட மோசமாக ஆகக்கூடும். மனம் உங்களது வாழ்கைத் துணையின் ஆரோக்கியத்தை பற்றிய கவலைகளில் ஆழ்ந்து இருக்கலாம். வாரத்தின் பிற்பாதியில், சில நல்ல பூஜை புனஸ்காரங்களில் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும். தேர்வுகள் மற்றும் போட்டிகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கும் சாதகமான செய்திகள் கிடைக்கலாம். எதிர்பார்த்த வெற்றி மாணவர்களின் உற்சாகத்தை அதிகரிக்கும்.

சிம்மம்: சிறு சிறு பிரச்சினைகள் ஒருபுறம் இருக்க, சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் அனுகூலமான வாரமாக அமையும். வாரத்தின் நடுப்பகுதியில் குடும்ப பிரச்னையை சரிவர கையாண்டு நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். மாணவர்கள் தங்கள் கல்வியில் கவனம் செலுத்துவார்கள் மற்றும் முழு கவனத்துடன் தங்கள் நோக்கங்களை அடைய உழைக்கத் தயாராக இருப்பார்கள். வாரத்தின் நடுப்பகுதியில் நீண்ட தூர பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. பயணம் சுவாரஸ்யமாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும். காதல் உறவுகள் வலுப்பெறும். குடும்ப உறுப்பினர்களும் உங்கள் காதல் உறவை ஒத்துக்கொண்டு, திருமணத்திற்கு சம்மதிக்கலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். குழந்தைகளைப் பற்றிய சில நல்ல செய்திகளை பெறலாம். இந்த கட்டத்தில், ஒரு புதிய மற்றும் பெரிய பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு, வீட்டிற்கும் வேலைக்கும் இடையில் ஒரு சமநிலையை பராமரிப்பது சற்று சவாலாக இருக்கலாம்.

கன்னி:இந்த வாரம் மிகவும் மங்களகரமானதாக இருக்கும். வாரத்தின் முதல் பாதியில் தொடங்கி, பணியிடம் அல்லது வியாபத்தைப் பற்றிய சில பாசிட்டிவ்வான செய்திகளைக் கேட்பீர்கள். நிதி பரிவர்த்தனைகளை செய்யும் போது எச்சரிக்கையாக இருங்கள். இந்த நேரத்தில், வீடு பராமரிப்பு, பழுதுபார்ப்பது உள்ளிட்டவைகளுக்காக அதிகமாக செலவழிக்கும் போது செலவு கைமீறிப் போக வாய்ப்புள்ளது. இதனால் பட்ஜெட் பாதிக்கப்படலாம். எந்தவொரு திட்டத்திலும் பணத்தை முதலீடு செய்யும்போது, சூழ்நிலைகளை மனதில் கொள்ள வேண்டும். காதல் உறவுகளைப் பொறுத்தவரை இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமான வாரம். உங்கள் வாழ்கைத் துணையுடன் இனிமையாக நேரத்தை செலவிட ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும். வாரத்தின் பிற்பகுதியில், நிறுவனத்தில் சீனியர்கள் மற்றும் ஜூனியர்கள் இருவரையும் சந்தித்து உரையாடுவது உகந்ததாக அமையும். . இதைச் செய்வதன் மூலம் மட்டுமே வேலையை துல்லியமாக நிர்ணயித்த கால அவகாசத்தில் நிறைவேற்ற முடியும்.

துலாம்: இந்த வாரம் நல்ல மற்றும் முற்போக்கானதாக இருக்கும். வேலையில் மூத்தவர்களிடமிருந்து பாராட்டு, அதே போல் ஜூனியர்களின் ஊக்கம், வாரத்தின் தொடக்கத்தில் ஆற்றலை வழங்கும். காதல் விவகாரங்களைப் பொறுத்தவரை அதிர்ஷ்டமானதாக இருக்கும். காதலை யாரிடமாவது வெளிப்படுத்த நினைத்தால், உங்கள் ஆசை நிறைவேறும். இருக்கும் காதல் உறவு வலுப்பெறும். ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வளரும். மனைவியுடனான உறவு நட்பாக இருக்கும். மேலும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை அனுபவிப்பீர்கள். வார இறுதிக்குள் சில நல்ல செய்திகள் வரக்கூடும். தீய கண்ணில் இருந்து தப்பிக்க, வேலையில் சாதனைகளைப் பற்றி பெருமை பேசுவதையும், குறிக்கோள்களைப் பற்றி யாரிடமும் சொல்வதையும் தவிர்க்கவும். வாரத்தின் இரண்டாம் பாதியில், எந்தவொரு பெரிய குடும்ப தீர்மானங்களையும் எடுக்கும்போது, உங்கள் பெற்றோரின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.

விருச்சிகம்:மற்றவர்களின் விமர்சனங்களை காதில் வாங்காமல் லட்சியத்தில் கவனம் செலுத்துங்கள். அதே நேரத்தில், வேலையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் உங்களை எதிர்க்கும் ரகசிய எதிரிகளிடம் இருந்து எச்சரிக்கையாக இருங்கள். ஏதோ ஒரு குறிப்பிட்ட விஷயத்தின் காரணமாக காதல் துணையுடன் வாக்குவாதம் செய்யலாம். இந்த விஷயத்தில் ஒரு பெண் தோழியின் உதவியால் பிரச்சனை சரியாகும். காதல் உறவைத் தக்கவைக்க, உங்கள் காதல் துணையின் உணர்வுகளை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். திருமண வாழ்க்கையில் இனிமை இருக்கும். வாரத்தின் இரண்டாம் பாதியில், குடும்ப உறுப்பினர்களுடன் நீண்ட தூர பயணத்தை மேற்கொள்ளலாம். பயணம் சுவாரஸ்யமாகவும், பொழுதுபோக்காகவும் இருக்கும். இந்த நேரத்தில், ஆடம்பரமாகக் கருதப்படும் விஷயங்களுக்கும் நிறைய பணம் செலவிடலாம்.

தனுசு:கணிசமான அளவு பொறுப்பு வழங்கப்படலாம். இதை அடைய, கூடுதல் முயற்சி செய்ய வேண்டும். இந்த சீசனில் வியாபார பயணம் லாபகரமாக இருக்கும். இந்த பயணத்தில், ஒரு முக்கியமான நபரை சந்திப்பீர்கள். இது எதிர்காலத்தில் நன்மைகளை அள்ளித்தரும் முயற்சிகளில் பங்கேற்க வாய்ப்பளிக்கிறது. காதல் உறவுகளைப் பொறுத்தவரை இந்த வாரம் எப்போதும் போல் சாதரணமாகவே இருக்கும். காதல் உறவு பாசம் மற்றும் நம்பிக்கையின் ஆதாரமாக இருக்கும். திருமண வாழ்க்கையில் இனிமை இருக்கும். வாரத்தின் பிற்பகுதியில், பலவிதமான தனிப்பட்ட கவலைகளுக்கான தீர்வுகளை நீங்கள் காணலாம். இதைத் தொடர்வதற்கு முன் கவனமாக இருக்க வேண்டும்.

மகரம்: குடும்ப பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விடுவதால், நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். சக ஊழியர்களுடன் ஒருங்கிணைந்து வேலையை செய்தால் மட்டுமே, வேலையை சரியான நேரத்தில் முடிக்க முடியும். இருப்பினும், எந்தவொரு முக்கியமான முடிவுகளையும் எடுப்பதில் அவசரப்பட வேண்டாம். காதல் விவகாரங்களுக்கு இந்த வாரம் உகந்த வாரமாக இருக்கும். காதல் உறவில் நல்ல உறுதியான பிணைப்பு ஏற்பட்டுள்ளதை உணர்வீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். தேர்வுப் போட்டிகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கலாம். மாணவர்களின் மேற்படிப்புக்கான ஆர்வம் அதிகரிக்கும். வாரத்தின் இரண்டாம் பாதியில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு வணிகம் தொடர்பான பயணமும் இனிமையானதாகவும், லாபகரமானதாகவும் இருக்கும். பெற்றோர் உங்களுக்கு முழு ஆதரவாக இருப்பார்கள்.

கும்பம்:சீனியர் மற்றும் ஜூனியர் இருவருடனும் இணைந்து வேலை செய்வது நல்ல பலன்களை அளிக்கும். உத்தியோகம் தொடர்பாக வாரத்தின் நடுப்பகுதியில், நீண்ட அல்லது குறுகிய தூர பயணத்திற்கான வாய்ப்புகள் இருக்கலாம். ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் போது, இந்த சமயம் சில உடல் உபாதைகள் ஏற்படலாம். பருவகால நோய்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள் மற்றும் சிறிய உடல்நலக் பிரச்சனைகளையும் புறக்கணிக்காதீர்கள். இல்லையெனில், மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருக்கும். அன்புக்குரியவரைப் பார்ப்பது பழைய நினைவுகளை மீண்டும் கொண்டு வரும். காதல் உறவுகள் வலுப்பெறும். காதலருடனான பரஸ்பர நம்பிக்கை வளரும். கடினமான சூழ்நிலைகளில், உங்கள் மனைவி எப்போதும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார் மற்றும் ஆதரவை வழங்குவார். வாரத்தின் இரண்டாம் பாதி தேர்வுப் போட்டிகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கும், ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். சில பெரிய நல்ல செய்திகளைப் பெற்ற பிறகு மனம் மகிழ்ச்சியடையும்.

மீனம்:வாரத்தின் தொடக்கத்தில், வேலைக்காக அதிக தூரம் பயணிக்க வாய்ப்புகள் இருக்கும். நீண்ட காலமாக ஒரு புதியஉத்தியோகத்தில் அமர வேண்டும் என்ற கருத்தைக் கொண்டவர்களுக்கு யாராவது அல்லது ஒரு நிறுவனத்திடமிருந்து சிறந்த வாய்ப்புகள் வரலாம். ஏற்கனவே வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வீடு, மனை வாங்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும், லாபம் கிடைக்கும். இளைஞர்கள் தங்கள் பெரும்பாலான நேரத்தை வேடிக்கையாக செலவிடுவார்கள். காதல் விவகாரங்களில் இருந்த தடைகள் நீங்கும். உங்கள் காதல் துணையுடன் நேரத்தை செலவிடுவீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்பத்துடன் ஒரு சுற்றுலா தலத்திற்கு பயணம் செய்யலாம். விருப்பமான நண்பர்கள் மூலம் வாரத்தின் பிற்பாதியில் நன்மைகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு கூடுதல் வருமான ஆதாரங்கள் அமையும்.

இதையும் படிங்க:மீன ராசிக்காரரே கோபத்தை கட்டுப்படுத்துங்கள்.. பின்விளைவை ஏற்படுத்துமாம்! உங்க ரசிக்கு என்ன தெரியுமா? - Today Tamil Rasipalan

ABOUT THE AUTHOR

...view details