மேஷம்:மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த வாரத்தின் இரண்டாம் பாதி மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். இந்த வாரம், அனைத்து விதமான சவால்கள் மற்றும் தடைகளைத் தாண்டி, உங்கள் குறிப்பிட்ட வேலையில் வெற்றி பெறுவீர்கள். காதல் உறவுகள் மேம்படும். உங்களுடைய அழகான பேச்சு சாதுர்யம் சீர்குலைந்த வேலையை முடிக்க உதவும்.
திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆரோக்கிய ரீதியாக, இந்த வாரம் எப்போதும் போல் இருக்கும். இருப்பினும், எந்தவொரு முக்கியமான முடிவுகளையும் எடுப்பதற்கு முன் உங்கள் நிலைமையை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். வாரத்தின் நடுப்பகுதியில் பணியிட தகராறு காரணமாக வேலையை சீக்கிரம் முடிக்க வேண்டியிருக்கலாம்.
வாரத்தின் பிற்பாதியில், குடும்ப உறுப்பினரிடமிருந்து மகிழ்ச்சியான செய்திகளைக் கேட்பீர்கள். பிரார்த்தனைகள் இறை வழிபாடு போன்றவற்றை நம்பத் தொடங்குவீர்கள். உணர்ச்சி வசப்பட்டோ அல்லது மற்றவர்களின் பதட்டம் அல்லது அழுத்தத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும்.
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள் இந்த வாரம் வீட்டிலும், வெளியிலும் சின்னச்சின்ன விஷயங்களுக்கு கூட முக்கியத்துவம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். கோபத்திலும் ஆத்திரத்திலும் யாரிடமும், இது நல்லது கெட்டது என்று சொல்வதைத் தவிர்க்கவும். சொத்து வாங்குவது, விற்பது என்ற எண்ணம் இருந்தால் அது நிறைவேறும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சந்தையில் சிக்கிய பணமும் எதிர்பாராத விதமாக கைக்கு வரும். உங்கள் காதல் துணையுடன் ஏற்பட்ட பிணக்குகள், மற்றும் தவறான புரிதல்கள் உங்களின் முயற்சிகள் மூலம் சரி செய்யப்பட்டு உங்கள் காதல் வாழ்க்கை மீண்டும் சரியான வழியில் செல்லும். வாழ்க்கைத் துணையுடன் நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ளலாம்.
தாயாரின் உடல்நிலை குறித்து நீங்கள் கொஞ்சம் கவலைப்படுவீர்கள். பரீட்சை, போட்டிக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு, வாரத்தின் இரண்டாம் பாதியில் சில நல்ல தகவல்கள் வந்து சேரும். வாரத்தின் பிற்பகுதியில், ஒரு சீனியர் அல்லது செல்வாக்கு மிக்க நபரின் உதவியால் வீடு மனை மற்றும் நிலம் தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
மிதுனம்: திட்டமிட்ட வேலையை சரியான நேரத்தில் முடிக்காவிட்டால், மனம் அமைதியற்றதாக இருக்கும். வேலையிலும் பணிச்சுமை இருக்கும். இந்த வாரம் மற்றவர்களை நம்பி இருக்காதீர்கள்; இல்லையெனில், சரியான நேரத்தில் உதவி கிடைக்காவிட்டால் நீங்கள் அதிருப்தி அடைவீர்கள். அத்தகைய சந்தர்ப்பத்தில், தன்னிறைவு பெற முயற்சி செய்யுங்கள்.
ஒரு அழகான பரிசை வழங்குவதன் மூலம் உங்கள் காதல் உறவில் ஏற்படும் சண்டை சச்சரவுகளை சுமுகமாக தீர்த்து வைத்து உங்கள் காதல் துணையை மகிழ்விக்கலாம். கணவன் மனைவிக்கிடையே அன்பும் நல்லிணக்கமும் இருக்கும். உங்கள் குழந்தைகளின் மகிழ்ச்சியை உறுதிப்படுத்த நீங்கள் இன்னும் கொஞ்சம் பணம் செலவழிக்க வேண்டியிருக்கும்.
உங்கள் உணவுப் பழக்கத்தில் மிகுந்த கவனம் செலுத்துங்கள். வயிறு தொடர்பான பிரச்சினைகள் இருக்கலாம். உங்களுக்கு பணப் பிரச்சினை இருந்தால், வாரத்தின் முதல் பாதியில் அதைத் தீர்க்க முயற்சிக்கவும். நிலம், கட்டிடங்கள் மற்றும் வாகனங்களை வாங்கி விற்கும் திட்டங்கள் சில காலத்திற்கு ஒத்திவைக்கப்படலாம்.
கடகம்: இந்த வாரம் கடக ராசியியில் பிறந்தவர்கள், அவர்கள் வெற்றிக்கான முயற்சிகளை தொடர்ந்து எதிர்க்கும் நபர்களிடமிருந்து சற்று தள்ளியே இருக்க வேண்டும். காதல் உறவுகளில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. நீங்கள் உற்சாகமாக இருக்கும் எந்தவொரு சூழ்நிலையிலும், உங்களுடைய சுயநினைவை இழக்கக்கூடாது, ஏனென்றால் சமூகத்தில் உள்ள உங்களுடைய மரியாதை கெடலாம்.
வாரத்தின் தொடக்கத்தில், நீங்கள் வேலைக்காக நீண்ட அல்லது குறுகிய தூரம் பயணிக்க வேண்டியிருக்கும். இந்த வாரம், உங்கள் நிலைமையைக் கருத்தில் கொண்ட பின்னரே எந்தவொரு முக்கிய பொறுப்புகளையும் ஏற்கத் தயாராகவும், இல்லையென்றால் பின்னாளில் அதற்காக வருத்தப்பட நேரிடலாம்.
வாரத்தின் பிற்பகுதியில், சீனியரின் உதவியுடன் தொழில் பிரச்சினைகள் தீர்க்கப்படலாம். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இந்த வாரம் சற்று ஏறத்தாழ இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் நீங்கள் அக்கறை கொள்ளவும்.
சிம்மம்: இந்த வாரம் சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு, தொழில், வியாபாரத்தில் முன்னேற வேண்டும் என்ற லட்சிய கனவு நிறைவேறும். காதல் தொடர்புகளில் ஒரு உறுதி இருக்கும். உங்கள் காதல் உறவு திருமணத்திற்கு வழிவகுக்கும். குடும்பத்தினர் உங்கள் காதலை ஏற்றுக்கொள்வார்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
நீங்களும் உங்கள் வாழ்க்கைத் துணையும் ஒன்றாக ஒரு சுற்றுலா தலத்திற்கு பயணம் செய்யலாம். குடும்ப உறுப்பினர்களிடையே மகிழ்ச்சியும் ஒத்துழைப்பும் இருக்கும். இசை, கலை, நடனம் ஆகியவற்றில் இளைஞர்களின் ஆர்வம் வளரும். இந்த வாரம் நிலம், கட்டிடங்கள் மற்றும் வாகனங்களை வாங்கவும் விற்கவும் ஒரு நல்ல நேரம்.
உங்கள் பெற்றோர் உங்களுக்கு அன்பையும் ஆதரவையும் வழங்குவார்கள். தேர்வுகள் மற்றும் போட்டிகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டமாக இருக்கும். சில நல்ல செய்திகளைக் கேட்கலாம். உங்கள் குழந்தைகள் உங்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்பர்கள். உங்கள் நெருங்கிய நண்பர்களுடன் ஜாலியாக நிறைய நேரம் செலவிடுவீர்கள்.
கன்னி:வாரத்தின் தொடக்கத்தில், நீங்கள் உங்கள் வேலைக்காக நீண்ட அல்லது குறுகிய தூரம் பயணிக்க வேண்டியிருக்கும். காதல் பார்ட்னர்ஷிப்பில், நீங்கள் உங்களுக்கும் உங்கள் வாழ்கைத் துணைக்கும் எப்போதும் நேர்மையாக இருங்கள். ஓரே நேரத்தில் இரண்டு படகுகளை ஒட்டுவது கடுமையான சிக்கல்களுக்கு ஆளாகலாம். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு இருந்தாலும், திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
அலுவலகத்தில் பணிச்சுமை இருக்கும். உங்கள் இலக்கை அடைய, உங்கள் சீனியர் மற்றும் ஜுனியர் சக ஊழியர்களுடன் நீங்கள் ஒத்துழைக்க வேண்டும். நிதி சிக்கல்களில் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் வேலை செய்வது நன்மை பயக்கும். மாணவர்களின் கவனம் கல்வியில் இருந்து திசைமார்க் கூடும். உங்கள் உணவுப் பழக்கத்தில் மிகுந்த கவனம் செலுத்துங்கள்; இல்லையெனில், வயிற்று பிரச்சினைகள் ஏற்படலாம்.
துலாம்:துலாம் ராசிக்காரகளுக்கு, உங்கள் பதவியில் உயர்நிலையை அடைய அல்லது மரியாதை பெற நீண்ட காலம் காத்திருகிறீர்கள் எனில், உங்கள் கனவு இந்த வாரம் நனவாகலாம். வேலையில் உங்கள் மூத்த அதிகாரிகள் அவர்களுடைய வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் உங்களுக்கு வழங்குவார்கள்.