தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / spiritual

இன்று கட்டாயம் குடும்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.. இன்றைய ராசிபலன்! - September 19 Horoscope - SEPTEMBER 19 HOROSCOPE

புரட்டாசி 3, செப்டம்பர் 19 வியாழன்கிழமையான இன்று 12 ராசிகளுக்கான பலன்களைக் காணலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 19, 2024, 6:21 AM IST

மேஷம்: இன்று நீங்கள் உங்கள் தோற்றத்தை மேம்படுத்த அதிக முயற்சிகள் செய்யலாம். இன்று உங்களின் எதிர்பார்ப்புகளை அதிகரிக்கும் நாளாக அமையக்கூடும். வெளிப்புற தோற்றத்தை வைத்து உறவுகளை அளவிடுவதை தவிர்க்கவும்.

ரிஷபம்: இன்று உங்களுக்கு காதல் உணர்வு அதிகம் இருக்கும். உங்கள் மனதிற்கு பிடித்தவர் பற்றிய எண்ணம் உங்களை ஆக்கிரமித்து, கனவிலும் அவர்களே ஆக்கிரமிப்பார்கள்.

மிதுனம்: உங்களின் வேலை மற்றும் குடும்பம் இடையே நேரத்தை சமமாக ஒதுக்கி சிறப்பாக செயல்படும் நாளாக அமையும். உங்கள் வேலைப்பளு அதிகம் இருந்த போதிலும், குடும்பத்திற்காக நேரத்தை ஒதுக்குவதுடன் சிறு பயணத்திற்கான ஏற்பாட்டினையும் செய்வீர்கள். இந்த நாள் உங்கள் கனவுகள் நிறைவேறும் நன்னாளாக அமையப் பெறும்.

கடகம்: நெருக்கமானவர்களுடன் உறவுகளை மேம்படுத்த முயற்சிப்பீர்கள். உங்கள் பக்தி மற்றும் அர்ப்பணிப்பு எதிர்காலத்தில் நன்மைகளைக் கொடுக்கும். இன்று உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மகிழ்ச்சியைப் பெறுவீர்கள். எதிர்காலத்தை மனதில் வைத்து செயல்படுவீர்கள். இது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

சிம்மம்: கடினமாக உழைப்பது, கடும் உழைப்பு என்ற இரண்டிற்கும் ஒரு பரந்த வேறுபாடு உள்ளது. இன்றைய தினம் நீங்கள் கடினமாக, புத்திசாலித்தனமாக உழைப்பீர்கள். வெற்றி பெற வேண்டும் என விரும்பினால், கடின உழைப்புக்கு மாற்று இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள், விரைவில் இதை நீங்கள் உணரவும் கூடும். எனவே, இன்று வியர்வை சிந்துவதில் தவறேதும் இல்லை. மேலும், கடின உழைப்பு எப்போதும் வட்டியுடன் சேர்த்து பலனளிக்கும்.

கன்னி: இன்று உங்கள் மனதில் யோசனைகள் பொங்கி வழியும். உங்கள் கடமைகளுடன் தற்போதைய வேலையை ஒப்பிட்டு குழம்புவீர்கள். புதிய தொடர்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தண்ணீரை விட ரத்தம் அடர்த்தியானது என்பதற்கு ஏற்ப, குடும்பத்தினரும், நண்பர்களும் உங்களுடன் மேலும் நெருக்கமாவார்கள்

துலாம்: உங்கள் உயர்வான குணம் மற்றும் இளகிய மனதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பலர் முயற்சிப்பார்கள். சிறிய பிரச்னைகளை பெரிதாக வளர்ந்து, உங்கள் இயல்பை மாற்றி, கோபத்தை அதிகரிக்கச் செய்யும். பண விவகாரங்களில் அதிக ரிஸ்க் எடுக்க உங்களுக்கு ஊக்கம் கிடைக்கும். உங்கள் மனதை நிலையாக வைத்துக் கொண்டால் இழந்த நிம்மதியை மீண்டும் பெறலாம்.

விருச்சிகம்: உங்கள் உணவு பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படுத்தி உடற்பயிற்சி மேற்கொண்டு உடல் பருமனை தவிர்க்கவும். உங்களின் ஆரோக்கியமற்ற உணவு மற்றும் வாழ்க்கை முறையால் உடல்நலக் குறைவுகள் ஏற்படும். ஆரோக்கியமாக சாப்பிட்டு சந்தோஷமாக வாழவும்.

தனுசு: உங்களின் சொந்த கருத்துக்களை மனதில் கொண்டு முடிவுகளை எடுப்பீர்கள். உங்கள் பிரதிபலிப்பின் மூலம் பல்வேறு சிக்கல்களுக்கான காரணத்தைக் கண்டறிய முயல்வீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் முடிவெடுக்க காலதாமதம் ஏற்பட்டாலும், விவேகமாக செயல்பட முயற்சி செய்வீர்கள்.

மகரம்: இன்று உங்களுக்கு வேலைப்பளு அதிகம் இருந்த போதிலும், உங்களை வேலைப்பளு பாதிக்காதவாறு நடந்து கொள்வீர்கள். உங்களுக்கான இலக்கை அமைத்து செயல்படுவதன் மூலம் வெற்றி அடையப் பெறலாம்.

கும்பம்: நீங்கள் அதிக வேகத்துடன் இலக்குகளை அடைய முற்பட்டாலும், அது நிறைவேறாமல் போக வாய்ப்பு உள்ளது. நாளைய பொழுதில் மாற்றம் இருப்பதால், நம்பிக்கை இழக்க வேண்டாம். சிறிது நேரம் ஓய்வு எடுத்து புத்துணர்ச்சி பெற்று கொள்ளுங்கள்.

மீனம்: இன்று ஒரு முக்கியமான நாள். வீட்டிலேயோ அல்லது பணியிடத்திலேயோ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு சாதனையை நீங்கள் செய்து முடிக்கலாம். உங்கள் தொழில்முறை மற்றும் சமூக அந்தஸ்தில் ஒரு படி முன்னேறுவீர்கள்.

ABOUT THE AUTHOR

...view details