தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / spiritual

மீன ராசிக்காரரின் நெடுநாள் ஆசை இன்று நிறைவேறும் வாய்ப்புள்ளது.. உங்க ராசிக்கு என்ன பலன்? - Today Rasipalan in Tamil - TODAY RASIPALAN IN TAMIL

Today Rasipalan in Tamil: செப்டம்பர் 12ஆம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களைப் பார்க்கலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 12, 2024, 6:40 AM IST

மேஷம்:உங்களை நீங்களே பாராட்டிக்கொண்டு, சிறந்த வகையில் ஆடைகளை அணிந்து கொள்வீர்கள். மற்றவர்களும் உங்களை, கவனித்துப் பார்த்தால், நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சி வெற்றியடைந்து அனைவரையும் கவர்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். அப்படி இல்லை என்றால், நீங்கள் மேலும் உங்களை திருத்திக் கொள்ள வேண்டும்.

ரிஷபம்:ஒரு மேலாளராக நிறுவனத்திற்குச் சிறந்த வகையில் லாபத்தை ஏற்படுத்திக் கொடுத்து, உங்கள் சக ஊழியர்களுக்கு உதவியாக இருப்பீர்கள். அணுகுமுறையை மாற்றிக் கொண்டு, அலுவலகத்தில் அனைவரது கருத்துக்களையும் கேட்டறிந்து, அவர்கள் கூறும் கருத்துகளுக்கு ஏற்ப முடிவெடுத்துச் செயல்படுவீர்கள். இதன் மூலம் வெற்றி வாய்ப்புகள் அதிகரிப்பதோடு, இக்கட்டான கால நிலைகளை சமாளிக்கும் நிலையும் ஏற்படும்.

மிதுனம்:எதிர் பாலினத்தவருடன், உங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதன் மூலம், நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். அரசுத் துறையில் இருப்பவர்கள், மேலதிகாரியிடமிருந்து ஊக்கமும், உதவியும் பெறுவார்கள். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் எந்தவிதமான பிரச்சினையும் எதிர்கொண்டு தீர்த்து விடுவார்கள்.

கடகம்:அலுவலகத்தில் செயல்திறனுடன் பணியாற்றுவீர்கள். அதே நேரத்தில் பலவிதமான எண்ணங்கள் மனதில் அலைபாய்ந்து கொண்டிருக்கும். இதனால் சில கவனச்சிதறல் ஏற்பட்டாலும், அதிலிருந்து விலகி பணியில் கவனம் செலுத்துவீர்கள். மனதிற்குப் பிடித்தவருடன், நேரத்தைச் செலவிடுவதற்காக பணியை விரைந்து முடிக்க முயற்சி செய்வீர்கள்.

சிம்மம்:உங்களுக்கு பயணம் செய்வது மிகவும் பிடிக்கும். அதனால் குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் பயணம் மேற்கொள்வதற்கான திட்டம் ஒன்றை வகுக்கும் சாத்தியக்கூறு உள்ளது. கலைத்துறையில் இருப்பவர்கள், பலரது பாராட்டைப் பெறுவார்கள். பொதுவாக இன்று பிறந்த நாளாக இருக்கும்.

கன்னி: குறிக்கோளை நிறைவேற்ற மனதை ஒருமுகப்படுத்தி செயல்புரிவீர்கள். இதன் மூலம் உங்கள் வெற்றியை நீங்களே நிர்ணயித்துக் கொள்வீர்கள். உங்களது நிர்வாகத்திறன் சிறந்த வகையில் இருக்கும். வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்குள் கொழுந்துவிட்டு எரியும். முடிவெடுக்கும் திறன் மற்றும் ஆராய்ந்து பார்க்கும் திறன் இருப்பதால் உங்களது நிர்வாகத் திறன்கள் மேலும் அதிகரிக்கும்.

துலாம்:போட்டியாளர்கள் உங்களைப் பார்த்துப் பொறாமைப்படும் நிலையில் இருப்பீர்கள். உங்கள் வெற்றியை தடுக்கவும், புகழைக் குறைக்கவும் அவர்கள் விரும்புவதால், எச்சரிக்கையுடன் செயல்படவும். அவர்களுடன் மோதல் போக்கைக் கடைப் பிடிப்பதற்கு பதிலாக, அவர்களது பின்புலங்களை அறிந்து கொண்டு எச்சரிக்கையுடன் செயல்படவும். வாழ்க்கையில் தோன்றும் புதிய காதல் உறவால் நன்மை ஏற்படும்.

விருச்சிகம்:நண்பர்களைப் பெறுவது எப்படி என்ற புத்தகம், உங்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது போல் தோன்றுகிறது. இதனால் உங்கள் நடைமுறை வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் இருக்கும். புதிய வர்த்தக முயற்சியை மேற்கொள்வதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகள் பாராட்டப்படும். குறிப்பாக உங்களது ஆளுமைப் பண்பை அனைவரும் அறிந்து கொள்வார்கள்.

தனுசு: உங்கள் மனநிலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டு, தோற்றத்திலும் மாற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. உங்களது புதுமையான ஆடை, நகை மற்றும் நறுமணம் உங்கள் ஆளுமையை வெளிப்படுத்தும். நீங்கள் இன்று ஒரு காந்தம் போல் அனைவரின் கவனத்தையும் கவர்வீர்கள். உங்களுடைய ரசிகர்கள் உங்களை வரவேற்பார்கள்.

மகரம்:பல்வேறு வழிகளிலிருந்து பணவரவு இருக்கும். ஆனால் அதற்கேற்ற செலவுகளும் இருக்கும். வருமானத்தை மீறி செலவு செய்யாமல் பார்த்துக் கொள்ளவும். அலுவலகத்தில் சிறிய பிரச்சினைகள் ஏற்பட்டாலும் உங்களது அனுபவம் மற்றும் திறமையின் காரணமாக அவை அனைத்தும் வெற்றி பெறுவீர்கள்.

கும்பம்: கனவு இல்லம் அல்லது வாகனம் கைகூடும் வாய்ப்புள்ளது. கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் புதிய சொத்துக்கள் வாங்கக்கூடும். அதனால், அது தொடர்பான விவரங்களை சேகரித்து, கடன் விண்ணப்பம் செய்ய நடவடிக்கை எடுக்கவும். கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்துவதற்கு இது சிறந்த நாள்.

மீனம்:ஒரு நல்ல நாள் உங்களுக்காக காத்திருக்கிறது. அனைத்து வேலைகளையும் குறிப்பிட்ட நேரத்துக்குள்ளாகவே திறமையாகச் செய்து முடித்துவிடுவீர்கள். குடும்பத்துடன் விடுமுறைக்காக வெளியில் செல்ல திட்டமிடுவீர்கள். உங்களது நெடுநாளைய ஆசை இன்று நிறைவேறும் வாய்ப்புள்ளது.

ABOUT THE AUTHOR

...view details