ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / spiritual

வாழ்க்கைத் துணை, அன்பை பொழிந்து திக்குமுக்காட வைப்பார்.. எந்த ராசிக்குத் தெரியுமா? - Today Rasipalan in Tamil - TODAY RASIPALAN IN TAMIL

செப்டம்பர் 16ஆம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களைப் பார்க்கலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 16, 2024, 6:35 AM IST

மேஷம்: பணிச்சுமையால் மன அழுத்தம் அதிகமாக ஏற்படலாம். தாராளமானவராக இருக்கலாம், ஆனால் தேவைப்படும்போது சாதுரியமாகவும் இருக்கத் தெரிந்து கொள்ளவேண்டும். அப்போதுதான் உங்களை மக்கள் புரிந்து கொள்வார்கள்.

ரிஷபம்: மன அழுத்தம் ஏற்படலாம். அதன் காரணமாக இன்றைய தினம் தனிமையில் நேரம் செலவழிக்க வேண்டும் என்று உங்களுக்கு தோன்றலாம். இயல்பான சாதாரண வாழ்க்கை இருந்தால் போதும் என்ற எண்ணமும் உங்களுக்குத் தோன்றலாம்.

மிதுனம்: பிரச்சினைகளை தீர்ப்பது என்பது கடுமையான பணியாக இருந்தாலும் கூட, உங்களால் அதை நிறைவேற்ற முடியும். அதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டாலும், நம்பிக்கை இழக்கவேண்டாம், உறுதியும் கடின உழைப்பும் பலனளிக்கும்.

கடகம்: உங்கள் தொழில் கூட்டாளிகளுடன் நேரத்தை செலவிட நேரலாம், உங்கள் அதிகாரத்தை கட்டுப்பாட்டுடன் பயன்படுத்தினால், முக்கியமான ஒரு ஒப்பந்தத்தை இன்று முடிக்க முடியும். இன்று வாழ்க்கைத் துணை, அன்பை பொழிந்து உங்களை திக்குமுக்காட வைப்பார்.

சிம்மம்: உங்கள் கொள்கைகளில் சமரசம் செய்ய வேண்டாம். அதன் விளைவாக உங்களுக்கு ஆத்ம திருப்தி ஏற்படும். தொழில்முறை விவகாரங்களில் நிதர்சனமான, வர்த்தகரீதியான அணுகுமுறையை தொடர்வது நன்மையளிக்கும்.

கன்னி: சில சிக்கல்களால் நீங்கள் எரிச்சலடையக்கூடும். உங்களுடைய ஆளுமையை மேம்படுத்துவதற்கான ஒரு படிப்பை நீங்கள் தொடர்வதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. நெருக்கமான உரையாடல், உடல்ரீதியான இனிய அனுபவத்திற்கு உங்களை இட்டுச் செல்லும் வாய்ப்பும் உள்ளது.

துலாம்: உங்கள் மனதில் பழைய நினைவுகள் அலைமோதும். கடந்த காலத்தின் நல்ல நினைவுகளை நினைவில் வைக்க விரும்புவீர்கள். ஒத்த எண்ணம் கொண்டோருடன் அமர்ந்து, கருத்துக்கள் மற்றும் எண்ணங்களைப் பரிமாறிக்கொள்ளும் வாய்ப்பு கிட்டும். இன்றைய மற்றும் எதிர்கால மகிழ்ச்சியை கருத்தில் வைத்து, சிந்திப்பது நன்மையளிக்கும்.

விருச்சிகம்: உங்களுக்கு பல எதிர்பாராத ஆச்சரியங்கள் நடைபெறும். தொழில் ரீதியான கூட்டங்கள் மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தைகளில் இறுதி முடிவு உங்களுடையதாகவே இருக்கும். உங்களை சுற்றி இருப்பவர்களை மகிழ வைக்கக்கூடிய வாய்ப்புள்ள நாள் இது.

தனுசு: காதல் வாழ்க்கைக்கு உகந்த நாள் என்பதோடு, உங்கள் உள்ளம் கவர்ந்தவருடன் முழு நாளையும் செலவழிக்கும் வாய்ப்பு இருக்கிறது. புதிய ஆடை வாங்கும் வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்தமாக சொல்லப்போனால், இன்று நீங்களும் உங்கள் நண்பர்களும் இணைந்து பொழுதை இனிமையாக கழிப்பீர்கள்.

மகரம்: பணியிடத்தில் சிறப்பாக செயல்பட்டு, வெற்றிக்கு முக்கிய பங்காற்றுவீர்கள். இருந்தாலும், உங்கள் முயற்சிகள் கவனிக்கப்படாமலோ அல்லது உரிய பாராட்டையோ பெறாமல் போகலாம். இது உங்களுக்கு ஏமாற்றம் அளித்தாலும், உங்கள் மதிப்பு உங்களுக்குத் தெரியும் என்பதால் அதைப் பற்றி கவலைப்படமாட்டீர்கள்.

கும்பம்: உங்களுக்கு சாதகமான நல்ல நாள். தத்துவங்கள், மதிப்புகள், அரசியல் என பல கருத்துக்களைப் பற்றி பேசலாம். அல்லது உங்கள் காதல் துணையுடன் மகிழ்ச்சியாக வெளியில் செல்ல வாய்ப்புள்ளது.

மீனம்: காதல் உறவுகளில் ஒரு முக்கிய திருப்புமுனை நாளாக இருக்கலாம். வீட்டிலும், அலுவலகத்தைப் போன்றே கடுமையாக உழைக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்வீர்கள். கடின உழைப்புக்கு நிகர் வேறு எதுவும் இல்லை என்பதை உணர்ந்து கொள்வீர்கள்.

ABOUT THE AUTHOR

...view details