மேஷம்: உங்களது வாழ்க்கையில் உற்சாகத்தை ஏற்படுத்திக் கொள்ளவும். ஏதேனும் புதிய இடங்களுக்குச் செல்ல தயாராக இருக்கவும். ஏதேனும் ஒரு பணியில் மனம் லயித்து வேலை செய்யவும். அதற்காக அளவுக்கு அதிகமாக வேலை செய்யக் கூடாது. குழு நடவடிக்கைகளில் அனைவரது கவனமும் உங்கள் பக்கம் இருக்கும்.
ரிஷபம்: உங்களது கவனம் தனிப்பட்ட நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மீது இருக்கும். அவர்களுடனான உங்கள் ஆத்மார்த்தமான உறவுகள் மூலம் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். இன்று முழுவதும் அவர்களது எண்ணங்களே உங்கள் மனதில் நிறைந்திருக்கும்.
மிதுனம்:தொழிலைவிட உடல் நலத்தின் மீது அதிகம் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. உடற்பயிற்சி செய்ய கூடுதல் நேரம் எடுத்துக் கொள்வீர்கள். சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பரத்துறையில் இருப்பவர்களுக்கு இது சிறந்த நாள். உங்களது சிறந்த மார்க்கெட்டிங் உத்தி மூலம், அதிகபட்ச லாபத்தை ஏற்படுத்த முடியும்.
கடகம்: இன்று வேடிக்கையான மனநிலையில் இருப்பீர்கள். வேடிக்கை, வம்புப் பேச்சுக்கள், சிரிப்பு மற்றும் குதூகலம் நிறைந்த இன்றைய தினத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நாளின் பிற்பகுதியில், வழக்கமான அமைதி நிலைக்குத் திரும்பி, பணியில் கவனம் செலுத்தி, வேலையை நிறைவு செய்வீர்கள்.
சிம்மம்: பணியில் அதிக கவனம் செலுத்துவீர்கள். ஈடுபாட்டுடன் வேலை செய்து பணிகளை நிறைவு செய்வீர்கள். உங்கள் திட்டத்தின் மீது கவனம் செலுத்துவீர்கள். நீங்கள் வேலை செய்யும் முறையை சிறிது மாற்றிக் கொள்வது உங்களுக்கு முன்னேற்றத்தைக் கொடுக்கும்.
கன்னி:கூட்டாளித்துவ திட்டத்தை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. தனிப்பட்ட முறையில் தொழில் செய்தால், உங்கள் செயல்திறன் மூலம், மற்றவரை விடச் சிறப்பாக செயல்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எவருடைய உதவியும் இல்லாமல், பணியை மிகச் சிறப்பாக நிர்வாகம் செய்வீர்கள்.
துலாம்:மக்கள் கூறும் அனைத்தையும் ஏற்றுக் கொள்வீர்கள். அதைப் பற்றி எதுவும் குறை கூற மாட்டீர்கள். உங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களைப் பார்த்து ஆச்சரியப்படுவீர்கள். உங்களது நீக்குப் போக்காக அணுகுமுறையின் மூலம், உங்களது கருத்துக்களை நியாயப்படுத்தி எடுத்துக்கூற முடியும்.
விருச்சிகம்: அறிவுப்பூர்வமாக சிந்திக்காமல் மனப்பூர்வமாகச் சிந்திப்பீர்கள். அதனால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் இருப்பீர்கள். அவ்வாறு செய்ய முயற்சி செய்யவும் கூடாது. ஆனால் உணர்ச்சிகளை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதில் கவனமாக இருக்கவும். ஏனென்றால் இதன் மூலம், பொதுமக்கள் உங்களைத் தவறாக புரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்புண்டு.
தனுசு:மேலதிகாரிகள் உங்கள் மீது நம்பிக்கை வைத்துக் கூடுதல் பொறுப்புகளை வழங்குவார்கள். நீங்களும் அதற்காக கடுமையாக உழைத்து, உங்கள் திறமையை நிரூபிப்பீர்கள். உங்களது உழைப்பு பாராட்டைப் பெறும். ஊக்கத்தொகை கிடைத்தால் ஆச்சரியப்பட வேண்டாம். நீங்கள் அதற்கு தகுதியானவர் தான்.
மகரம்:வெளிப்படையான மற்றும் நேரடியான அணுகுமுறையின் மூலம், உங்களுக்கு நெருக்கமானவர்கள் மனதை புண்படுத்தக் கூடும். உறவுகளில் ஏற்பட்ட விரிசல்களை நீக்கவும், மனக்காயங்களை போக்கவும் முயற்சிகள் மேற்கொள்வீர்கள். இருந்தாலும் உறவுகளை சீர் செய்வதற்கான உங்களது முயற்சி எதிர்பார்த்த பலனைக் கொடுக்காமல் இருக்க வாய்ப்புள்ளது.
கும்பம்: இன்று காதல் வயப்படக் கூடும். திருமணம் ஆகாதவர்கள், காதல் உணர்வின் காரணமாக மகிழ்ச்சியாக இருப்பார்கள். திருமணமானவர்களுக்கும் இன்று மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். இருவரும் ஒன்றாக சிறந்த முறையில் நேரத்தைச் செலவிடுவார்கள். பழைய புகைப்படங்களைப் பார்த்து, மலரும் நினைவுகள் குறித்த எண்ணங்களை பகிர்ந்து கொள்வீர்கள்.
மீனம்: ஒரே விதமான தினசரி பணிகளின் காரணமாக மந்தமாக உணர்வீர்கள். ஏதேனும் ஒரு இடத்திற்குச் சென்று நேரத்தைச் செலவிட வேண்டும் என்று விரும்புவீர்கள். தற்போதைய பணிகளில் கடுமையாகத் தொடர்ந்து வேலை செய்து வந்ததன் காரணமாக, இந்த ஓய்வு மிகவும் அவசியம்.