மேஷம்: சில முடிவுகள் எடுப்பது கடினமாக இருந்தாலும், நீங்கள் உறுதியாக இருந்தால், எளிதாக முடிவெடுக்கலாம். உங்களது நோக்கம், உணர்வுரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தினாலும், முடிவு ஒன்றை எடுத்துவிட்டால், அதில் உறுதியாக இருக்க வேண்டும். உங்கள் முன்னேற்றப் பாதையில், சிறிது நிதானமாகச் செயல்படவும்.
ரிஷபம்: இன்று, நிச்சயமாக பயணம் மேற்கொள்ள திட்டமிடுவதற்கான நாள் அல்ல. அது சாதாரணமான விஷயங்களுக்காக என்றாலும் கூட புதிய திட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்படலாம். நீங்கள் உங்கள் காதல் துணையுடன், உல்லாசமாக இருத்தல் அல்லது ஸ்பாவில் இளைப்பாறுதல் போன்றவற்றின் மூலம் உங்கள் சோம்பல் நீங்கலாம். எப்படி இருந்தாலும், உங்களுக்கு செலவு ஏற்படும்.
மிதுனம்: செயல்கள் மற்றும் உணர்ச்சிகள் இடையே சமநிலையைப் பராமரிக்க நீங்கள் பெரிதும் முயற்சி செய்வீர்கள். அதில் வெற்றி அடையவில்லை என்றாலும் கூட உங்கள் நண்பர்களுடன் நீங்கள் பழகும் போது பெரிதும் ஏமாற்றம் ஏதும் இருக்காது. உங்கள் காதல் துணையுடன் நீங்கள் சிறந்த வகையில் நேரத்தைச் செலவிடுவீர்கள்.
கடகம்: இன்று, உங்களுக்கு நாள் முழுவதிலும் ஒரு தீவிரமான மனநிலை காணப்படலாம். குறிப்பாக, சிறிது குழப்பமான மனநிலை இருக்கலாம். எனினும், நீங்கள் உணர்ச்சி ரீதியாக சிந்திக்கக் கூடாது. நடைமுறைக்கு ஏற்ற வகையில் செயல்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இல்லையென்றால், பிரச்சனையான சூழ்நிலையில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்புள்ளது. உங்கள் உடல் நலத்தின் மீதும், உணவுப்பழக்க வழக்கத்தின் மீதும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பழக்கத்தில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
சிம்மம்: குடும்பத்தில் உள்ள இளைய உறுப்பினர்கள் மீது நீங்கள் அதிக கவனம் செலுத்துவீர்கள். குழந்தைகள் தனது தினசரிக் கடமைகளை சிறந்த முறையில் செய்ய வழிகாட்டியாக இருப்பீர்கள். கொண்டாட்டம் மேற்கொள்வதற்கான சூழ்நிலை உங்களுக்கு ஏற்படும். ஏதேனும் போட்டி அல்லது நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நீங்கள் ஆர்வமாக இருப்பீர்கள்.
கன்னி:முன்னதாக நீங்கள் செய்த சிறந்த பணிகளுக்காக உங்களுக்கு வெகுமானம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மற்றவர்களின் ஆலோசனை பெறுவதற்கு பதிலாக, நீங்களே காரியத்தை செய்து முடிக்க விரும்புவீர்கள். எனினும் நீங்கள், சுற்றி நடக்கும் விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. பொறுமையாகவும், அமைதியாகவும் செயல்பட வேண்டும்.