மேஷம்:குழந்தைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். ஏனெனில், அவர்களின் எதிர்காலத்தை நினைத்து, நீங்கள் இத்தனை நாள் உழைத்து வந்தீர்கள். நெடுநாட்களாக முடிக்காமலிருந்த பணிகளை நிறைவு செய்வீர்கள். மருத்துவத்துறை மற்றும் பொதுத்துறையில் இருப்பவர்களுக்கு இன்று சிறந்த நாள்.
ரிஷபம்: இன்று ஆக்கப்பூர்வமான போட்டி நிறைந்த நாள். உங்களது செயல் திறன் மூலமாக உடன் பணிபுரிபவர்களையும், மேல் அதிகாரிகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள்.
மிதுனம்:மூளை சொல்வதை விட, மனம் சொல்வதை தான் அதிகம் கேட்பீர்கள். அதனால், பல்வேறு உணர்வுகளால் பாதிக்கப்படுவீர்கள். இதனால், நல்லவை மற்றும் கெட்டவை இடையிலான வித்தியாசத்தை புரிந்து கொள்ள முடியாமல் இருக்கும். எனினும், மாலை நேரத்தில் நிலைமை மேம்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
கடகம்:இன்றைய தினத்தைப் பிரகாசமான வருங்காலத்திற்கான ஒரு நிச்சயமான திட்டத்துடன் தொடங்குவீர்கள். உத்திகளை திறமையாக சிந்தித்து அமல்படுத்துவீர்கள். முறையாக எடுக்கப்பட்ட முடிவுகளின் மூலம், நேரத்தைச் சேமிப்பீர்கள். உங்கள் முயற்சி அனைத்தும் வெற்றி பெறும்.
சிம்மம்:புதிய திட்டங்களை எடுத்துக்கொண்டு திறமையாக செயல்படுவீர்கள். அனைத்து செயல்களையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தனிப்பட்ட உறவுகளில் பாதிப்புகள் ஏற்பட்டாலும், அது தொடர்பான பிரச்சனைகளை வெற்றிகரமாக தீர்த்து விடுவீர்கள்.
கன்னி:குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வீர்கள். பரிவர்த்தனைகளை கையாளும்போது, உங்கள் பேச்சுத்திறன் காரணமாக, அனைத்து சச்சரவுகளையும் சுமுகமாக முடித்து வைப்பீர்கள். நடுநிலையுடன் இருப்பதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வீர்கள்.
துலாம்:உணவின் மீது உங்களது ஆர்வம் அதிகம் இருக்கும். ஆசைகளை பூர்த்தி செய்யும் வகையில், பலவிதமான உணவுகளை சுவைத்து மகிழ்வீர்கள். தொழில் துறையைப் பொறுத்தவரை, எந்த திசையில் போவது என்று சிறிது குழப்பநிலை நிலவலாம். எனினும், பலவிதமான வழிகளை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும்.
விருச்சிகம்:நீங்கள் ஒரு பட்டாம்பூச்சி போல் இருப்பீர்கள். வம்பு பேச்சுகளை போக்கி, சமூகக் குழுக்களில் அன்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்துவீர்கள். நாம் என்ன கொடுக்கிறோமோ அது தான் திரும்பிக் கிடைக்கும். அதனால் மகிழ்ச்சியை பரப்பினால், நமக்கு மகிழ்ச்சி கிடைக்கும்.
தனுசு:பணியில் உறுதியுடனும், அர்ப்பணிப்புடனும் வேலை செய்வீர்கள். இதனால் வேலைப்பளு அதிகரிக்கக்கூடும். உங்களுக்கு வேலை செய்வதிலும் ஆர்வம் அதிகம் இருக்கும். நாளின் பிற்பகுதியில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ஆகையால், குதுகலத்துடன் மாலைப் பொழுதை அனுபவிக்கவும்.
மகரம்: வரும் வாய்ப்பு எதையும் தவறவிடாமல் கவனமாக செயல்படுவீர்கள். சட்டம் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பீர்கள். தரகர் அல்லது ஒப்பந்தக்காரர் என்றால், நஷ்டம் ஏற்படும் வாய்ப்பு உண்டு. இது பெரிய அளவிலான நஷ்டமாகவும் இருக்கலாம்.
கும்பம்:குடும்பத்தினரை மிகவும் விரும்புபவர் என்பதால், அவர்களுடன் வீட்டில் நேரம் செலவிட சரியான நேரம் இது. கடைகளுக்கு அல்லது சுற்றுலா சென்று, அவர்களுக்கு வேண்டியதை வாங்கிக்கொடுத்து சந்தோஷப்படுத்தவும்.
மீனம்:மக்களிடம் அனுதாப மனப்பான்மையுடன் நடந்து கொள்வீர்கள். இதனால் சிலரின் ஆசிகளைப் பெறுவீர்கள். நீங்கள் நல்ல மேலதிகாரியாக, நல்ல சக பணியாளராக, கணவனாக அல்லது மனைவியாக மற்றும் நல்ல மகன் அல்லது மகளாக உங்களை நிரூபிப்பீர்கள். இந்த நல்ல தன்மையை கை விடாமல் இருக்க வேண்டும்.