மேஷம்:உங்கள் மனதிற்கு பிடித்தவர்களை மகிழ்ச்சிப்படுத்த நீங்கள் முயற்சி செய்வீர்கள். அவர்கள் மனதைக் கவர புதுமையான முயற்சி மேற்கொள்வீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தொடர்பாக அதிருப்தி இருக்கக்கூடும். எனினும், புதிய நண்பர்களுடன் மாலையில் விருந்துக்கு செல்வீர்கள்.
ரிஷபம்:இன்று நீங்கள் உணர்வு ரீதியாக பாதிக்கப்பட்டு இருப்பீர்கள். உங்களுக்கு நெருக்கமான ஒருவருடன் உணர்ச்சிப் போராட்டம் காரணமாக பிரச்சனைகள் ஏற்படக்கூடும். உங்கள் சந்திப்பின்போது, மற்றவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் காரணமாக குழப்பமான நிலை நிலவக்கூடும். சச்சரவுகள் அல்லது விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.
மிதுனம்:உங்கள் மனதுக்குப் பிடித்த விஷயங்களில் நீங்கள் ஈடுபடுவீர்கள். உதவி கோரும் மக்களுக்கு நீங்கள் உதவ முன் வருவீர்கள். அதனால், நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களது தாராள மனப்பான்மை காரணமாக, உங்கள் சமூக அந்தஸ்து உயர்ந்து அனைவரையும் நம்பிக்கையும் பெறுவீர்கள்.
கடகம்:விரும்பத்தகாத நிகழ்வுகள் அல்லது சூழ்நிலைகளை நீங்கள் சந்திக்கக்கூடும். அதனால், நீங்கள் மனக்கவலை அடைவீர்கள். உங்கள் செயல் திறனின் மூலமாக அனைத்தையும் வெற்றி கொள்வீர்கள். படிப்பில் கவனம் செலுத்தவும். வெற்றி என்பது 99 சதவீத முயற்சி மற்றும் ஒரு சதவிகித விதி என்பதை நினைவில் கொள்ளவும்.
சிம்மம்:பழைய நண்பர்களை மீண்டும் சந்திக்கவும் புதிய தொடர்புகளை உருவாக்கவும், இன்று சிறந்த நாளாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்கள் வீட்டிற்கு வருகை தரக்கூடும். வீட்டில் சிரிப்பு மழை பொழியும். விருந்தினர்கள் மற்றும் உறவினர்களுக்கு நீங்கள் சிறந்த வகையில் விருந்து அளிப்பீர்கள்.
கன்னி:இன்று உங்கள் உறவுகள் மற்றும் தொடர்புகள் மீது உணர்வுகள் ஆதிக்கம் செலுத்தும். உணர்ச்சி ரீதியான பாதிப்பின் காரணமாக நீங்கள் பாதிக்கப்படுவீர்கள். எனினும், மற்றவர்கள் கூறும் விஷயத்தின் மீது நம்பிக்கை வைக்காமல், உள்ளார்ந்த உணர்வுகளை மதித்து நடந்துகொள்வீர்கள்.