மேஷம்:பணிச்சுமையால் மன அழுத்தம் அதிகமாக ஏற்படலாம். இருந்தாலும், மன அழுத்தத்தால் உங்கள் எதிரிகளுக்கு எந்தவித வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்க மாட்டீர்கள். தாராளமானவராக இருக்கலாம், ஆனால் தேவைப்படும்போது சாதுரியமாகவும் இருக்கத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் உங்களை மக்கள் புரிந்து கொள்வார்கள்.
ரிஷபம்:மன அழுத்தம் உங்களை வாட்டி எடுக்கும். இன்றைய தினம் சிக்கலானதாகவும், கடினமானதாகவும் இருக்கலாம். தனிமையில் நேரம் செலவழிக்க வேண்டும் என்று உங்களுக்கு தோன்றலாம். இயல்பாக சாதாரண வாழ்க்கை இருந்தால் போதும் என்ற எண்ணமும் உங்களுக்குத் தோன்றலாம்.
மிதுனம்:இன்று மற்றவர்களின் உணர்வுகளை காயப்படுத்தாமல் கவனமாக இருக்கவேண்டும். உங்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களின் கருத்தை கவனமாகக் கேட்டு, அவர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க உதவ வேண்டும். இன்று மாலையில், மதம் சார்ந்தவர்கள் மற்றும் அறிவுஜீவிகளுடன் உங்கள் நேரத்தை செலவிடுவீர்கள்.
கடகம்: இன்றைய தினம் ஒரு சவாலான மற்றும் சிக்கலான நாளாக இருக்கப் போவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் தென்படுகின்றன. சில பிரச்சனைகளைத் தீர்க்க, சற்றே இலகுவாக இருப்பதும், பிடிவாதத்தை தளர்த்திக் கொள்வதும் நல்லது. தனிப்பட்ட வாழ்க்கையில், உங்களின் அன்பானவர்களிடம் அதிக நேரம் செலவழித்து மகிழ்ச்சியாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.
சிம்மம்: உங்கள் பங்குதாரர் அல்லது வாழ்க்கைத் துணையிடமிருந்து உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறாது என்பதால் எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். தொழில் செய்பவர்களுக்கும், கமிஷன் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களும் இது கடினமான நாள் என்பதால், பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவேண்டும். முக்கிய ஆவணங்களைக் கவனமாக ஆய்வு செய்த பிறகே கையெழுத்திடவும்.
கன்னி:இன்று உங்கள் திறமையை அதிகரிக்க இலக்கை அதிகரிப்பீர்கள். ஏற்கனவே இருக்கும் தடைகளை தகர்க்க உயர் இலக்குகளை நீங்களே அமைக்க வேண்டும். பிற்பகலில் நிதி நிலைமை பற்றி அதிக கவலை எழும். சின்னஞ்சிறு விஷயங்கள் கூட உங்கள் உறுதியை குலைக்கும். இருந்தாலும் கூட, மாலை நேரத்தில் ஆன்மீக விஷயங்களில் ஈடுபட்டு, உங்கள் இலக்கை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல பரிந்துரைக்கிறோம்.