தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / spiritual

வெற்றியைக் கொண்டாட போகும் ராசிக்காரர் யார் தெரியுமா?.. உங்க ராசிக்கான பலன் என்ன! - TODAY RASIPALAN

டிசம்பர் 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களைப் பார்க்கலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 20, 2024, 6:33 AM IST

மேஷம்: குழந்தைகள் உங்கள் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிப்பார்கள். எனவே, அவர்களின் எதிர்காலத்தை நினைத்து அவர்களுக்காக உழைப்பீர்கள். நெடு நாட்களாக முடிக்காமல் இருந்த பணிகளை நிறைவு செய்வீர்கள், மருத்துவத்துறை மற்றும் பொதுத்துறையில் இருப்பவர்களுக்குசிறந்த நாளாக இருக்கும்.

ரிஷபம்:ஆக்கபூர்வமான போட்டி நிறைந்த நாளாக இருக்கும். உங்களது செயல் திறன் மூலமாக உங்களுடன் பணிபுரிபவர்களையும், மேல் அதிகாரிகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள். அவர்கள் உங்களுக்கு உதவி செய்ய ஆர்வமாக இருப்பார்கள். நீங்கள் மேற்கொள்ள உள்ள பணியில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

மிதுனம்: இன்றைய தினத்தில் சில குறிப்பிட்ட நபர்களுடனான உறவு உணர்வு பூர்வமானதாக இருக்கும். இதனால் மன மகிழ்ச்சிடைவீர்கள். நாளின் பிற்பகுதியில் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயங்களை எதிர்நோக்க நேரிடும். எனினும், பதற்றம் அடையாமல் நிதானமாக கையாண்டால் அதிலிருந்து தப்பிக்கலாம்.

கடகம்:பணியை பொறுத்தவரை மிகவும் சாதகமான நாடாக இருக்காது. எதிபார்த்த வேலையை காட்டிலும் அதிக வேலையின் காரணமாக சோர்வாக உணரக்கூடும். வேலையில் குழப்பமான மனநிலை இருக்கும். குழந்தைகள் பிரிவால் தனிமையாக உணர்வீர்கள்.

சிம்மம்: அனைத்து முடிவுகளையும் நன்றாக சிந்தித்து, விரைவாக மேற்கொள்வீர்கள். நீங்கள் உற்சாகமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருப்பீர்கள். வழக்கமான பணி என்றாலும், கூடுதல் கவனம் செலுத்தி பணியாற்றுவது நல்லது. சிலருடன் விவாதத்தில் ஈடுபடும் வாய்ப்புள்ளது. எனவே, கவனத்துடன் செயல்படவும்.

கன்னி: குடும்பம் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் பேச்சு திறன் மற்றும் அறிவாற்றல் காரணமாக சச்சரவுகளைத் தீர்த்து விடுவீர்கள். பொறுமையின் முக்கியத்துவத்தை உணர்ந்து அனைத்தையும் அமைதியாக அணுகுவீர்கள்.

துலாம்:குடும்பத்துடன் நேரம் செலவிடுவீர்கள். அவர்களுடன் சிறிய பயணம் அல்லது சுற்றுலா செல்லும் வாய்ப்புண்டு. குதூகலமான நாளாக இருக்கும். மன அமைதிக்காக நீங்கள் கோவயில்களுக்கும், ஆன்மீக இடங்களுக்கும் செல்லும் வாய்ப்புள்ளது.

விருச்சிகம்:வெளிக்காட்டாமல் மனதில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த உணர்வுகள் வெளிவரக்கூடும். இதனால், உங்கள் உடல் நிலையில் பாதிப்பு ஏற்படலாம். மன அழுத்தத்தை போக்க மனதிற்கு பிடித்தவர்களுடன் செலவிடுவது நல்லது.

தனுசு: குறிக்கோளை நோக்கிய உங்களது பயணம் வெற்றி பெறும். உங்களது உறுதியான மனப்பான்மை, உங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும். எனினும் உங்கள் பாதையில் சவால்களை எதிர்கொள்ளும் வாய்ப்புண்டு.

மகரம்: உடல் நலத்தின் மீது கவனம் செலுத்துவது சிறந்த பலனை அளிக்கும். நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதில் கால தாமதம் ஏற்படலாம். ஆனால், அனைத்தையும் நிறைவு செய்து விடுவீர்கள். காலதாமதம் காரணமாக மேலதிகாரி உங்கள் மீது வருத்தம் கொள்ளலாம். உங்களுக்கு நிதி நிலைமை நன்றாகவே இருக்கும்.

கும்பம்: குடும்பத்தினருடன் விருந்துக்கு செல்வீர்கள் அல்லது கோயிலுக்குச் செல்வீர்கள். அனைவருடனும் ஒன்றாக நேரத்தை கழிக்கும் தருணங்கள் மகிழ்ச்சியை கொடுக்கும். நீங்கள் பகிர்ந்து கொள்ளும் அன்பு பல மடங்காகி உங்களை வந்தடையும். குடும்ப உறுப்பினர்கள் உங்களை பாராட்டுவார்கள்.

மீனம்: வாழ்க்கையில் சில மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்யவும். ஒரே நாளில் அனைத்தையும் முடித்துக் கொள்ள முடியாது என்பதால், அதற்கென்று சில நேரத்தை எடுத்துக் கொண்டு பணியாற்றவும். பிடித்த செயல்களில் கவனம் செலுத்துவதன் மூலம் பணியில் சிறந்து விளங்க முடியும்.

ABOUT THE AUTHOR

...view details