மேஷம்:சில விஷயங்களை அனுசரித்து நடக்க வேண்டும். முக்கியமாக, உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். பொதுவாக நீங்கள் உறுதியானவராக இருக்கலாம். ஆனால் இன்று அவ்வாறு நடந்து கொள்வது நல்லதல்ல. மனதிற்குப் பிடித்தவர்களுடன் இணக்கமாக நடந்து கொள்ளுங்கள். வாழ்க்கைத் துணையிடம் உங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாம்.
ரிஷபம்:பொருட்களை வாங்குவதற்கு அதிக நேரம் செலவழிப்பீர்கள். அதற்காக சந்தைகள், மால்கள் என பலவகை ஸ்டோர்களுக்குச் சென்று பொருட்களை வாங்குவீர்கள். நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு பேரம் பேசி, விலையைக் குறைத்து வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். இன்றைய நாளின் இறுதியில், அதிக பொருட்களை வாங்கியிருப்பீர்கள்.
மிதுனம்:இலக்குகளை எளிதாக நிறைவேற்றுவீர்கள், அதில் அதிக சிரமம் இருக்காது. தாமதம் மற்றும் தடைகள் ஏதுமின்றி, உங்கள் பணியை நிறைவேற்றுவீர்கள். பணியை தொடங்குவதற்கு முன், அதுகுறித்து நன்றாக புரிந்து கொண்டு செயல்பட்டால் மட்டுமே சாத்தியமாகும். முயற்சி மூலம் கிடைத்த பலன்களினால், திருப்தியடைந்து சந்தோஷமாக இருப்பீர்கள்.
கடகம்: அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசும். நிலம், வீடு அல்லது கட்டடம் தொடர்பான வர்த்தகத்தில் லாபம் அடையும் வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் உங்களுக்கு மேலதிகாரிகள் மற்றும் உடன் பணியாற்றுபவர்கள் இடமிருந்து, முழு ஆதரவு கிடைக்கும். மொத்தத்தில் இன்று லாபகரமான நாள்.
சிம்மம்:புதிதாக எதையாவது முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் உங்களிடம் இருக்கும். இன்று முழுவதும் புத்துணர்ச்சியாக உணர்வீர்கள். உங்களது ஆற்றல் மற்றும் ஆர்வத்தின் காரணமாக வெற்றி கிட்டும். கிரகங்கள் சாதகமாக இருக்கின்றன. அதனால், உங்களுக்கு ஏற்படும் சவால்களை ஏற்றுக்கொண்டு, அதனை நிறைவேற்ற முயற்சி செய்யலாம்.
கன்னி:நிதி விவகாரங்கள் தொடர்பாக, பெரிய தடை ஒன்று ஏற்படக்கூடும். உணர்ச்சிகளுக்கு கட்டுப்படாமல், அறிவுப்பூர்வமாக சிந்திப்பது நல்லது. உங்கள் தனிப்பட்ட உறவுகள் மீது கூடுதல் கவனம் செலுத்தவும். நீண்ட காலங்களுக்கு உறவுநிலை நல்ல நிலையில் இருக்க, புதிய பணிகள் மற்றும் கடமைகள் மீது கவனம் செலுத்துவதைப் போலவே, உறவிற்கும் முக்கியத்துவம் கொடுக்கவும்.