தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / spiritual

இன்றைய ராசிபலன்: வாழ்க்கைத் துணையால் எதிர்பாராத ஆச்சரியங்கள் காத்திருக்கு..! எந்த ராசிக்காரருக்கு தெரியுமா? - Today Rasipalan - TODAY RASIPALAN

Today Rasipalan in Tamil: ஏப்ரல் 5ஆம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களைப் பார்க்கலாம்.

Today Rasipalan in Tamil
Today Rasipalan in Tamil

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 5, 2024, 7:12 AM IST

Updated : Apr 5, 2024, 10:24 AM IST

மேஷம்:இன்று பணிச்சுமையால் மன அழுத்தம் அதிகமாக ஏற்படலாம். இருந்தாலும், மன அழுத்தத்தால், உங்கள் எதிரிகளுக்கு எந்தவித வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்க மாட்டீர்கள். தாராளமானவராக இருக்கலாம்; ஆனால், தேவைப்படும்போது சாதுர்யமாகவும் இருக்கத் தெரிந்துக் கொள்ளவேண்டும். அப்போதுதான் உங்களை மக்கள் புரிந்து கொள்வார்கள். இன்று நீங்கள் அனைவருக்கும் ஒரு முன்னோடியாக செயல்படலாம் என்று பரிந்துரைக்கிறோம்.

ரிஷபம்:மன அழுத்தம் உங்களை வாட்டி எடுக்கும் இன்றைய தினம் சிக்கலானதாவும், கடினமானதாகவும் இருக்கலாம் என்று சொல்லலாம். தனிமையில் நேரம் செலவழிக்க வேண்டும் என்று உங்களுக்கு தோன்றலாம். இயல்பான சாதாரண வாழ்க்கை இருந்தால் போதும் என்ற எண்ணமும் உங்களுக்குத் தோன்றலாம்.

மிதுனம்:இன்று, பிரச்சனைகளை தீர்ப்பது என்பது கடுமையான பணியாக இருந்தாலும் கூட, உங்களால் அதை நிறைவேற்ற முடியும். அதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டாலும், நம்பிக்கை இழக்கவேண்டாம், உறுதியும் கடின உழைப்பும் பலனளிக்கும். உங்களைச் சுற்றி நடக்கிற விஷயங்களையும், சுற்றியுள்ளவர்களையும் நன்றாக புரிந்து கொள்ள முடியும். உங்கள் காதல் துணையை ஷாப்பிங்குக்கு அழைத்துச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கடகம்:இன்றைய தினம், நீங்கள் கடுமையாக நடந்துக் கொள்ள நேரிடலாம். பிற்பகலில் உங்கள் தொழில் கூட்டாளிகளுடன் நேரத்தை செலவிட நேரலாம், உங்கள் அதிகாரத்தை கட்டுப்பாட்டுடன் பயன்படுத்தினால், முக்கியமான ஒரு ஒப்பந்தத்தை இன்று முடிக்க முடியும். இன்று வாழ்க்கைத் துணை, அன்பை பொழிந்து உங்களை திக்குமுக்காட வைப்பார்.

சிம்மம்:இன்று உங்கள் கொள்கைகளில் சமரசம் செய்ய வேண்டாம். அதன் விளைவாக உங்களுக்கு ஆத்ம திருப்தி ஏற்படும். ஆனால், இணக்கமான அணுகுமுறையை கைவிட வேண்டாம். தொழில்முறை விவகாரங்களில் நிதர்சனமான, வர்த்தக ரீதியான அணுகுமுறையை தொடர்வது நன்மையளிக்கும்.

கன்னி: இன்று ஏற்படும் சில சிக்கல்களால் நீங்கள் எரிச்சலடையக்கூடும். உங்களுடைய ஆளுமையை மேம்படுத்துவதற்கான ஒரு படிப்பை நீங்கள் தொடர்வதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. நெருக்கமான உரையாடல், உடல்ரீதியான இனிய அனுபவத்திற்கு உங்களை இட்டுச் செல்லும் வாய்ப்பும் உள்ளது.

துலாம்:இன்று உங்கள் மனதில் பழைய நினைவுகள் அலைமோதும். கடந்த காலத்தின் நல்ல நினைவுகளை நினைவில் வைக்க விரும்புவீர்கள். ஒத்த எண்ணம் கொண்டோருடன் அமர்ந்து, கருத்துக்கள் மற்றும் எண்ணங்களைப் பரிமாறிக்கொள்ளும் வாய்ப்பு கிட்டும். தத்துவம், மதம் என பலதரப்பட்ட விஷயங்களில் உங்கள் சிந்தனைகளை பகிர்ந்து கொள்வீர்கள். இன்றைய மற்றும் எதிர்கால மகிழ்ச்சியை கருத்தில் வைத்து, சிந்திப்பது நன்மையளிக்கும்.

விருச்சிகம்:இன்று உங்களுக்கு பல எதிர்பாராத ஆச்சரியங்களை வைத்திருக்கும். பல மர்மங்களை சுலபமாக அவிழ்க்கும் சந்தர்ப்பங்கள் வாய்க்கும். தொழில் ரீதியான கூட்டங்கள் மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தைகளில் இறுதி முடிவு உங்களுடையதாகவே இருக்கும். உங்களைச் சுற்றி இருப்பவர்களை நகைச்சுவையால் மகிழ வைக்கக்கூடிய வாய்ப்புள்ள நாள் இது.

தனுசு:காதல் வாழ்க்கைக்கு உகந்த நாள் என்பதோடு, உங்கள் உள்ளம் கவர்ந்தவருடன் முழு நாளையும் செலவழிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இன்று கனவுக் கோட்டைகளை கட்டலாம். புதிய ஆடை வாங்கும் வாய்ப்பு தென்படுகிறது. ஒட்டுமொத்தமாக சொல்லப்போனால், இன்று நீங்களும் உங்கள் நண்பர்களும் இணைந்து ஷாப்பிங் செய்து பொழுதை இனிமையாக கழிப்பீர்கள்.

மகரம்:இன்று, நீங்கள் அமைதியாக அமர்ந்து, கடந்த காலத்தில் செய்த தவறுகளை பற்றி சிந்திக்க வேண்டும். பணியிடத்தில், அணியின் உறுப்பினராக நீங்கள் செயல்பட்டு, வெற்றிக்கு முக்கிய பங்காற்றுவீர்கள். இருந்தாலும், உங்கள் முயற்சிகள் கவனிக்கப்படாமலோ அல்லது உரிய பாராட்டையோ பெறாமல் போகலாம். இது உங்களுக்கு ஏமாற்றம் அளித்தாலும், உங்கள் மதிப்பு உங்களுக்குத் தெரியும் என்பதால் அதைப் பற்றி கவலைப்படமாட்டீர்கள்.

கும்பம்:இன்று உங்களுக்கு சாதகமான நல்ல நாள். நண்பர்களுடன் அரட்டை அடிக்கலாம், பாடலாம், கும்மாளம் போடலாம், அழலாம். தத்துவங்கள், மதிப்புகள், அரசியல் என பல கருத்துக்களைப் பற்றி பேசலாம். இன்று இரவு, நீங்கள் ஹோட்டல், பீச், என வெளியில் ஜாலியாக சுற்றலாம், அல்லது உங்கள் காதல் துணையுடன் உல்லாசமாக தொலைக்காட்சியைப் பார்த்து ரசிக்கலாம்.

மீனம்: இன்று காதல் உறவுகளில் ஒரு முக்கிய திருப்புமுனை நாளாக இருக்கலாம். வீட்டிலும், அலுவலகத்தைப் போன்றே கடுமையாக உழைக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்வீர்கள். கடின உழைப்புக்கு நிகர் வேறு எதுவும் இல்லை என்பதை உணர்ந்துக் கொள்வீர்கள். இருந்தாலும், வியர்வை சிந்தி கடுமையாக உழைந்த நீங்கள், இன்றைய மாலை வேளையை உங்கள் அன்பானவர்களுடன் இணைந்து சந்தோஷமாக அனுபவிப்பீர்கள்.

Last Updated : Apr 5, 2024, 10:24 AM IST

ABOUT THE AUTHOR

...view details